கோவில் 231 - ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்

 🙏🙏              

மறு பதிவு                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-231

தோஷங்கள் போக்கி, திருமணம் வரமருளும் ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்

25.01.2022 செவ்வாய்

அருள்மிகு சுப்ரமணியேஸ்வர சுவாமி (நாகேஸ்வர சுவாமி) திருக்கோவில்

சிங்கராயபாலம்-521329

கிருஷ்ணா மாவட்டம் 

ஆந்திரா 

இருப்பிடம்: குடிவாடா 0.5 கிமீ 


மூலவர்: சுப்ரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சிங்கராயபாலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள முடினப்பள்ளி மண்டலம் சிங்கராயபாலத்தில் அமைந்துள்ளது. குடிவாடா 0.5 கிமீ -ல் உள்ள இக்கோவில் நாகேஸ்வர சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.


நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு வந்து, அபிஷேகம் செய்து பிரதட்சிணம் செய்கின்றனர். 5 வாரம் பூஜை முடிவதற்குள் திருமணம் நடக்கின்றது என்பது இக்கோவிலின் சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள சுப்ரமணிய சுவாமியை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுவதால் கருவுற்றிருக்கும் பாக்கியமும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவமும் அமையும் என்பது ஐதீகம்.   


ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் ராகு, கேது பூஜை, கால சர்ப்ப தோஷ பூஜை  போன்ற  நிவாரண பூஜைகளும்  நடைபெறுகின்றன. பக்தர்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்துப் படைப்பதோடு, தங்கள் தலைமுடியையும் காணிக்கையாக வழங்குகிறார்கள்.


சுப்ரமணிய சஷ்டி பெருவிழா 13 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சஷ்டிய்னறு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாணம், நவமியன்று ரதோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.தசமியன்று கோவிலுக்கு அருகில் உள்ள குளத்தில் தெப்போத்ஸவம் நடைபெறுகிறது. ஏகாதசியன்று லட்ச பத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.


தலவரலாறு:

முன்னொரு காலத்தில், பாபாஜி மட்டத்தில் இருந்து தெய்வீக பாம்பு ஒன்று லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஏரிக்கு சென்று குளித்துவிட்டு திரும்பும் போது, இரண்டு விவசாயிகள் பாம்பின் மீது கற்களை வீசினர். பாம்பு தலை தரையில் மோதி இறந்தது. கிராம மக்கள் இந்த பாம்பின் உடலை சவுருபலேமி ஏரிக்கரையில் புதைத்ததனர். கற்களை வீசிய இரண்டு கிராம மக்களும் பார்வை இழந்தனர். பின்னர் பாம்பிடம் மன்னிப்பு கேட்டபோது, அவர்கள் கண்களைத் திரும்பப் பெற்றனர். அதே இரவில், பாம்பு அவர்களின் கனவில் தோன்றி, கோவில் கட்டும்படி கட்டளையிட்டது. மறுநாள் காலை, கிராம மக்கள் பாம்பின் உடலை தோண்டி எடுத்து ஊர்வலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு கொண்டு சென்றனர். லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்குச் சென்று கொண்டிருந்த கறுப்பு மாடு (கபிலா), மந்தையிலிருந்து வெளியே வருவதைக் கண்டு, அந்த இடத்தைச் சுற்றி பிரதட்சிணம் செய்தனர். அவர்கள் இந்த இடத்தில் தோண்டத் தொடங்கினர், மேலும் இந்த இடத்தில் பாம்பின் உடலைக் கொண்டு வந்து கோவில் கட்டுவதற்கும் சடங்குகள் செய்வதற்கும் ஏற்றதாகக் கருதினர். ஊர் மக்கள் விருப்பப்படி, ஒரு பாம்பின் வடிவில் சுப்ரமணியருக்கு கோவில் எழுப்பப்பட்டு, அக்கோவிலை நாகேஸ்வர சுவாமி கோவில் என்று அழைத்தனர். தற்போது, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியேஸ்வரா கோவில் என்று அழைக்கப்படுகிறது.


தல அமைப்பு:

சுப்ரமணியேஸ்வர சுவாமி கருவறையில் 5 தலை நாகவடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வள்ளி, தெய்வானை இருவரும் இங்கு எழுந்தருளி அருள்கின்றனர். விநாயகப்பெருமான் தனி சந்ந்தியில் அருள்புரிகின்றார். 


திருவிழா:

சுப்ரமணிய சஷ்டி(13 நாள்), ஞாயிறு, செவ்வாய், வியாழன் விசேஷம் 


பிரார்த்தனை:

திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, சர்ப்ப தோஷம், ராகு, கேது தோஷங்கள் நீங்க


நேர்த்திக்கடன்: 

பொங்கல் படைத்தல், முடிகாணிக்கை, காதணி திருவிழா, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-1 மாலை 5-8 


புத்திர பாக்கியமருளும் ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமியை சென்னி மேல் வைத்து வணங்கி நல்லருள் பெறுவோம்! 

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - திருமணம் வரமருளும் ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி



படம் 2 - புத்திர பாக்கியமருளும் ஆந்திரா சிங்கராயபாலம் சுப்ரமணியேஸ்வர சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்