கோவில் 230 - ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏 மறு பதிவு
தினம் ஒரு முருகன் ஆலயம்-230
விநாயகர் சதுர்த்தியை அடுத்து வரும் 4 சோமவாரங்கள் தரிசித்தால், தோல் நோய்களை குணமாக்கும் ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்
24.01.2022 திங்கள்
அருள்மிகு ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
ராமகுப்பம்-517401
சித்தூர் மாவட்டம்
ஆந்திரா
இருப்பிடம்: குப்பம் 30 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் என்ற நகரில் உள்ள இந்த திருக்கோவிலில் பாம்பு வடிவில் முதன்மைக் கடவுள் சுப்ரமணிய சுவாமி அருள் புரிவது சிறப்பு. சுப்ரமணிய சுவாமி சிலை சுயம்புவாக இருப்பது மேலும் சிறப்பு. காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி செல்கின்றனர். சிலர் காளஹஸ்தி சென்று சிவப்பெருமானை தரிசித்து இங்கு வருகின்றனர். இந்த பழமையான கோவில், கேரளாவில் உள்ள கோவில்களை போன்று உள்ளது சிறப்பு.
பக்தர்கள் பாம்பு வடிவில் (சண்முக சர்ப்பகார) சுப்பிரமணிய பகவானுக்கு பூஜைகள் செய்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் நாக பஞ்சமி திருவிழா, சுப்ரமணிய சஷ்ட, விநாயகர் சதுர்த்தி, மாதக் கிருத்திகை, காவடி ஆட்டம் ஆகியவை பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
இக்கோவில் ஒரு சிறந்த வழிபாட்டுத்தலமாகும். இந்த பழமையான சுயம்பு சுப்ரமணிய கோவில், மிகவும் சக்தி வாய்ந்தது. சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று சர்ப்பதோஷ பூஜை செய்ய வேண்டும். இத்திருத்தலத்தில் சர்ப்பதோஷ பூஜை, குஜதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி பெருவிழா முடிந்த உடனே வரும் பாத்ரபத மாதத்தின் நான்கு திங்கட்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து வேண்டுவோருக்கு தோல்,நோய்கள் மற்றும் காதில் சீழ் வடிதல் குணமாகின்றன.
தலவரலாறு:
ராமகுப்பத்தைச் சேர்ந்த குருமூர்த்தி குடும்பத்தினரின் முன்னோடிகள் மூன்று உத்ஸவ பஞ்சலோக விக்ரஹங்களை தானமாக அளித்தனர். வெங்கட சுப்பையா குடும்பத்தினர் நிலம் வழங்கினர். ஏ சி சோமசேகர ரெட்டி குடும்பத்தினர் மற்றும் பிற பக்தர்கள் கோவில் மேம்பாட்டிற்காக நிறைய நன்கொடை அளித்துள்ளனர்,
தல அமைப்பு:
இந்தக் கோவில் கருவறையில் மூலவர் சுப்ரமணிய சுவாமி சுயம்பு வடிவில் பாம்புக் கடவுளாக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். வள்ளி, தெய்வானை ஆகிய தேவியர் இருவரும் உடனிருந்து அருளுகின்றனர்.
இங்குள்ள சித்தி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். விநாயகர் சதுர்த்தி பெரிவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அடுத்து வரும் நான்கு திங்கட்கிழமைகள் பக்தர்கள் திரள் திரளாக வருவது விசேஷம். மேலும், சிவப்பெருமான், நாக தேவதை, சனீஸ்வரர் மற்றும் பிற தெய்வங்கள் அருளுவது சிறப்பு.
திருவிழா:
சுப்ரமணிய சஷ்டி, நாக பஞ்சமி, விநாயகர் சவிதி(சதுர்த்தி), மாதக் கிருத்திகை, சஷ்டி, மகா சிவராத்திரி,
பிரார்த்தனை:
சர்ப்ப தோஷம் மற்றும் குஜ தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் இரவு 9 வரை
ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமியை மனமுருக வேண்டினால், தோஷங்கள் அனைத்தும் அகன்றிடும் ! .
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தோல் நோய்களை குணமாக்கும் ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில்
படம் 2 - தோஷங்கள் அனைத்தும் அகற்றிடும் ஆந்திரா சித்தூர் ராமகுப்பம் சுப்ரமணிய சுவாமி
Comments
Post a Comment