கோவில் 418 - கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-418

புத்துணர்ச்சி தந்தருளும் கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.7.2022 ஞாயிறு

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கொடும்தாரா-689645

பத்தனம்திட்டா

கேரளா மாநிலம்

இருப்பிடம்: பத்தனம்திட்டாவிலிருந்து 2 கிமீ

மூலவர் சுப்பிரமணிய சுவாமி


தலமகிமை:

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து 2.5 கிமீ தொலைவில் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில் என்ற பிரபலமான ஆலயம் உள்ளது. இதன் கூம்பு வடிவ கூரை, வட்ட வடிவ கருவறை என பாரம்பரிய கட்டிடக்கலைகள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


ஆதிசங்கரர் தனது மௌன விரதத்தின் போது இந்தக் கோவிலுக்குச் சென்றதாகவும், யோக துறவியான சக்திபத்ராவை சந்தித்ததாகவும் நம்பப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் வேலாயுதரின் அருளைப் பெறுவதற்காக தொலைதூரங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஆற்றின் இருப்பு புத்துணர்ச்சியை அளிக்கிறது மற்றும் அனைவரையும் பாதுகாக்கிறது.


தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் காவடி சுமத்தல், அலகு குத்துதல் பல்வேறு என விஷு தினத்தன்று, தாழூர் பகவதி அம்மனும், வலஞ்சுழி பகவதி அம்மனும் கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து அருள்வது சிறப்பு.


தல வரலாறு:

பாண்டிய நாட்டிலிருந்து 100 பிராமணர்களுடன் சுப்ரமணியய சுவாமி இங்கு வந்து எழுந்தருளியதாக நம்பிக்கை உள்ளது


தல அமைப்பு:

கூம்பு வடிவக் கூரைக் கொண்ட வட்ட வடிவ கருவறையில் 5 அடி உயர சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி கட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் சிவன், விஷ்ணு, கணபதி, கிருஷ்ணர், தர்ம சாஸ்தா, நாகராஜா மற்றும் நாகயக்ஷி, மகாயக்ஷியம்மா போன்ற தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர்..


திருவிழா:

தைப்பூசம், விஷு


பிரார்த்தனை:

புத்துணர்ச்சி பெற, நேர்மறை அதிர்வுகள் ஏற்பட, மன நிம்மதி அடைய


நேர்த்திக்கடன்:

காவடி, அலகு குத்துதல், அபிஷேகம். அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5-11 மாலை 5-8


நேர்மறை அதிர்வுகள் ஏற்படுத்தும் கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து பலனடைவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏


படம் 1 - நேர்மறை அதிர்வுகள் ஏற்படுத்தும் கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி



பதிவு 2 - நேர்மறை அதிர்வுகள் ஏற்படுத்தும் கேரளா கொடும்தாரா சுப்பிரமணிய சுவாமி கோவில் விமானம் கூம்பு வடிவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்