கோவில் 419 - கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில்
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-419 வாழ்க்கையை வளமாக்கும் கோயம்புத்தூர் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி (கோவை பழனி) கோவில் 1.8.2022 திங்கள் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கண்ணம்பாளையம்-641402 கோயம்புத்தூர் இருப்பிடம்: பாப்பம்பட்டி பிரிவிலிருந்து 3 கிமீ, காந்திபுரம் 19 கிமீ மூலவர் தண்டாயுதபாணி சுவாமி தீர்த்தம்: சரவண தீர்த்தம் தலமகிமை: கோவை–திருச்சி நெடுஞ்சாலையில், அர்த்தமண்டபத்தில் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து 3 கிமீ தொலைவில் கண்ணம்பாளையம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து 65, 65 A எண் பேருந்தில் 19 கிமீ தூரம் பயணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இக்கோவில் கோவை பழனி என்றும், கண்ணம்பாளையம் பழனியாண்டவ்ர் கோவில் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதி போலவே முனைவர் சென்னியப்பர் கண்ணம்பாளையம் பழனியாண்டவர் அனுபூதி இயற்றியுள்ளார். 27 படிகள் ஏறினால் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடையலாம். 27 படிகள் 27 நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் நட்சத்திரங்களின் படி காலை 10 மணி அளவில் நடைபெ...