கோவில் 380 - புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-380

வேண்டியன வேண்டிய வண்ணம் வழங்கும் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

23.6.2022 வியாழன்

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

புளியங்குடி-627855 

தென்காசி மாவட்டம் 

இருப்பிடம்: சங்கரன்கோவில்-கோவில் 18 கிமீ. தென்காசி-கோவில் 28 கிமீ

தொலைபேசி: 04636-235077


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தல விருட்சம்: அரச மரம்

தீர்த்தம்: ஷண்முக தீர்த்தம்


தலமகிமை:

தென்காசி மாவட்டம் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு மிக்க பழமையான திருத்தலமாகும். தென்காசி (28 கிமீ), சங்கரன்கோவில் (18 கிமீ) மற்றும் கடையநல்லூர் (14 கிமீ) போன்ற இடங்களிலிருந்து இக்கோவிலுக்கு செல்லலாம். புளியங்குடியின் மேற்கு பகுதி மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி ஆகும். மலையாறு பாய்ந்து வளம் கொழிக்கும் பகுதியாகும். சிவனும் முருகனும் வேறு வேறு அல்ல என்று ஒன்றுபடுத்திக்காட்டச் சான்று கூறும் திருத்தலமாக விளங்குவது இந்த தலமாகும். அதாவது அரு உருவமாய் அமைந்த சிவலிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றன.


பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான பூலின் பாண்டியன் காலத்தில் உருவாக்கப்பட்டதால், இவ்வூரை பூலியன்குடி அழைக்கப்பட்டு, காலப்போக்கில் புளியங்குடி என்று . புளியமர வனத்தில் குடியேற்றம் கண்டதால் இவ்வூர் புளியங்குடி என அழைக்கப்படலாயிற்று என்றும், பளியன் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததால் பளியன்குடி என அழைக்கப்பட்டு பின்னர் புளியங்குடி என்றானதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. புளியங்குடி புஎலுமிச்சை மரங்கள் மிகவும் செழிப்புடன் வளர்கின்றன. எனவே எலுமிச்சை பழங்கள் வியாபரத்திற்கு புகழ் பெற்றதாகும். 


புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். .தைப்பூச திருவிழா  முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும்.. விழா நாட்களில் தினமும் சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. 10–ம் திருநாளில் திருத்தேரோட்டம் மிக சிறப்பாக நடக்கும். திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுப்பர். பின்பு நடக்கும் தெப்பத் திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடபடுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவிழா முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதிஉலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 10-ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும். இதை தொடர்ந்து திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும்.


தல வரலாறு:

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையிலிருந்து பூலியன் என்ற பாண்டிய மன்னன் வேட்டைக்கு வந்தான். அவன் இவ்விடத்தை அடைந்து இங்கிருந்த புளியங்காட்டை அழித்து நகரை உருவாக்கினான். அதற்கு புளியங்குடி என பெயர் வைத்து இத்திருக்கோயிலையும் அமைத்து வழிபாடு செய்தான். இதனை புதுவை (புளியங்குடி) தலபுராணத்தில் முத்துவிடுகவிராயர் குறிப்பிட்டுள்ளார். இதை பதினாறாவதான பூலியன் நகர் கண்ட சருக்கத்தில் காணப்பேறுகிறது.


தல அமைப்பு:

இங்குள்ள கருவறையில் முருகப்பெருமான் பால பருவத்தில் குடிகொண்டு பக்தர்களுக்கு வேண்டியன வேண்டிய வண்ணம் வழங்கி அருள் செய்கிறார். அருள்மிகு சந்திரசேகரர் விசாலாட்சி அம்பிகை ஆகிய தெய்வ மூர்த்தங்கள் வழிபடு தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடும்பன், விநாயகர், தண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள், துர்க்கை, கன்னி விநாயகர். மீனாட்சி, சரஸ்வதி, வெங்கடாசலபதி, சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் முதலிய தெய்வங்கள் அருளுகின்றனர். 


திருவிழா:

தைப்பூசம் (தேரோட்டம்), பங்குனி உத்திரம் (தேரோட்டம்), வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, நவராத்திரி , 


பிரார்த்தனை:

வேண்டியந நிறைவேற, இகபர சௌபாக்கியம் கிட்ட


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல் 


திறக்கும் நேரம்:

காலை 6-11.45 மாலை 4.30-8.30


இகபர சுகங்களை அள்ளி வழங்கும் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றிப் பாடுவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - வேண்டியன வேண்டிய வண்ணம் வழங்கும் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருதேர் பவனி


படம் 2 - இகபர சுகங்களை அள்ளி வழங்கும் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி தெப்ப உலா


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்