கோவில் 379 - சென்னை ஜார்ஜ் டவுன் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-379

ஞானம் மேம்பட அருளும் சென்னை ஜார்ஜ் டவுன் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் 

22.6.2022 புதன்

அருள்மிகு குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

ஜார்ஜ் டவுன் 

சென்னை-600108

இருப்பிடம்: சென்னை பாரிஸ் கார்னரிலிருந்து 2 கிமீ. ரயில் நிலையம் 2 கிமீ

அலைபேசி: 97905 


மூலவர்: குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னை பாரிஸ் கார்னர் (பாரி முனை) 2 கிமீ தொலைவில் உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள சவுகார்பேட்டையில் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவில், ஒரு கையில் கமண்டலம், மற்றொரு கையில் ருத்ராட்ச மாணிகளை ஏந்தியவாறு நின்ற கோலத்தில் அருள்கின்றார். இக்கோவில் முருகப்பெருமானை, அகத்திய முனிவர் தங்கி வழிபாட்டார். 


தல வரலாறு:

இக்கோவில் 200 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. ராஜகோபுரத்தின் முன் மண்டபம் 20-ம் நூற்றாண்டில் திருவலம் கந்தசுவாமி செட்டியார் மற்றும் அவரது மனைவியின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.  மண்டபத்தின் தூண்களில் அவர்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. துவஜஸ்தம்பம் 2016-ல் நிறுவப்பட்டது. 


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய இக்கோவில் 3 நிலை ராஜகோபுரத்துடன் தென்புறம் 3 நிலை ராஜகோபுரமும் உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், அழகிய மயில் ஆகியவை அடுத்தடுத்து இருப்பது சிறப்பு. கோவிலின் கருவறைக்கு எதிரே துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கந்தசுவாமி 4 கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் வள்ளி 4 கரங்களுடனும், தெய்வானை 2 கரங்களுடனும் இருப்பது எங்குமே இல்லாத தனி சிறப்பாகும். 


கருவறையில் 5 சந்நிதிகள் ஒரே வரிசையில் இருக்கின்றன. விநாயகர், .அருணாசலேஸ்வரர் முதலான தெய்வங்கள் காலை  கிழக்கு நோக்கி நேர் கோட்டில் உள்ளனர். உள் மண்டபத்தில் அபிதா குஜாலாம்பாள், நால்வர், நவவீரர்கள் அருள்கின்றனர். கோஷ்டத்தில் தன்வந்திரி, வீரபத்திரர், துவார கணபதி, தட்சிணாமூர்த்தி, அகத்தியர், வீரபாகு, பால விநாயகர், நாகஸ்கந்தர், பாலமுருகன், நாராயணி, மகாவிஷ்ணு, பிரம்மா, வைஷ்ணவி, துர்க்கை அருளுவது சிறப்பு. பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், சித்தி புத்தி விநாயகர், இடும்பன், தண்டாயுதபாணி, கடம்பன். நவகிரகங்கள் மற்றும் நாகர்கள் ஆகியோரும் அருளுகின்றனர்.


திருவிழா:

வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, பிரதி வெள்ளி 


பிரார்த்தனை:

ஞானம், கல்வி பெற, உடல் ஆரோக்கியம் மேம்பட, வேண்டியவை கிடைக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல் 


திறக்கும் நேரம்:

காலை 6.30-11.30 மாலை 4.30-8.30


சென்னை ஜார்ஜ் டவுன் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமியை மனமொன்றி தொழுதல் உடல் ஆரோக்கியம் மேம்படும்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - ஞானம் மேம்பட அருளும் சென்னை ஜார்ஜ் டவுன் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில்




படம் 2 - உடல் ஆரோக்கியம் மேம்பட அருளும் சென்னை ஜார்ஜ் டவுன் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி





Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்