கோவில் 341 - நார்வே ஆஸ்லோ சிவசுப்ரமணியர் கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-341

2022 வைகாசி பவுர்ணமி திருநாளில் திருமண வரமருளும் நார்வே ஆஸ்லோ சிவசுப்ரமணியர் கோவில்

15.5.22 ஞாயிறு

அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோவில்

மார்ட்டீன் ஸ்ட்ராண்ட்லிஸ் (Martin Strandlis vei 10), 

0956 ஆஸ்லோ CH49 5NQ (oslo),

நார்வே 


மூலவர்: சிவசுப்ரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை 


தல மகிமை:

மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவில் இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நார்வே சிவசுப்பிரமணியர் இங்குள்ள ஆலயத்தில் குடியமர்ந்து அருள் பாலிக்கின்றார்.


புதிய இடத்தில் ஆலயம், முருகப்பெருமானின் அடியவர்களின் பேருதவியாலும், வங்கியிலிருந்து பெற்ற 20 மில்லியன் க்ரோன் கடன் மூலமும், பெரும்பான்மையான திருப்பணி வேலைகள் முடிவடைந்துள்ளது. 


மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்து சிறப்புகளையும் கொண்ட இக்கோவிலில் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இத்திருகோவிலுக்கு என மூன்று தேர்கள் உள்ளது எங்குமே இல்லாத சிறப்பு. வருடாந்திர மகோற்சவம் (ஆவணி) வெகு விமரிசையாக தேரோட்டத்துடன் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விரதம், தைப்பூச விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், செவ்வாய் விரதம் இக்கோவிலின் சிறப்பு,    


தலவரலாறு:

புலம் பெயர்ந்த தமிழர்கள் (இலங்கை, இந்தியா) அமிர்தத்தை ஒத்த தமிழையும், சைவ சமயத்தையும் கலை, கலாச்சாரம், பண்பாட்டு நெறிமுறைகளையும் பாதுகாக்கும் நோக்கில், 23.07.1993 அன்று நார்வே இந்து கலாச்சார மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மன்றத்தின் மூலம் முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்பபட்டு, 01.05.1998-ல் சித்திரை வளர்பிறை புனர் பூச நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 25 வருடங்களாக நார்வே வாழ் தமிழர்கள் மற்றும் இதர மக்களுக்கு அருள்பாலித்து வருகின்ற சிவசுப்ரமணியருக்கு, நிரந்தர இடம் வாங்கி, கோவில் எழுப்பப்பட்டு, மேலும் சில தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சந்நிதிகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் மகா கும்பாபிசேகம் நடக்க உள்ளது.  


தல அமைப்பு:

மிகவும் பொலிவுடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணியர் நின்ற கோலத்தில் அழகு பொதிந்து பகதர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மூன்று தேர் கொண்ட சிறப்பு முருகன் இவர்.


மேலும், விநாயகர், சிவப்பெருமான், பார்வதி, நடராஜப்பெருமான், சண்டிகேஸ்வரர், சந்தான கோபாலன், ஐயப்பன், பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் சிறப்புற வீற்றிருந்து அருளுகின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி பொங்கல், வருட பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, பிரதி செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை 


பிரார்த்தனை:

திருமணம் வரம் வேண்டி, நோய்கள் குணமாக, தீய எண்ணங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 11.30-2 மாலை 6-9 


முழ நிலவன்று நார்வே ஆஸ்லோ சிவசுப்ரமணியரை மனக்கண்ணால் தரிசித்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - திருமண வரமருளும் நார்வே ஆஸ்லோ சிவசுப்ரமணியர்


படம் 2 - தீராத நோய்கள் எல்லாம் தீர்க்கும் நார்வே ஆஸ்லோ சிவசுப்ரமணியரின் தேரோட்ட திருவிழா


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்