கோவில் 340 - இங்கிலாந்து லிவர்பூல் முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-340

வாழ்வு செழிக்க அருளும் இங்கிலாந்து லிவர்பூல் முருகன் கோவில்

14.5.22 சனி

அருள்மிகு லிவர்பூல் முருகன்  திருக்கோவில்

51A எல்தம் கிரீன் (51A Eltham Green), 

பிர்கன்ஹெட் (Birkenheead)

விர்ரல் CH49 5NQ (Wirral CH49 5NQ),

லிவர்பூல் (Liverpool) 

இங்கிலாந்து [England]

யுனைட்டெட் கிங்டம் [United Kingdom]


மூலவர்: லிவர்பூல் முருகன்  

தேவியர்: வள்ளி, தெய்வானை 


தல மகிமை:

இங்கிலாந்து லிவர்பூல் நகரில் விர்ரல் என்னும் பகுதியில் புகழ் பெற்ற லிவர்பூல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றியுள்ள இந்து சமுதாய மக்கள், பக்தர்கள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பைக் பெற்றிட பாரம்பரிய மற்றும் மத வழிபாட்டில் வழிபடுவதற்காக இத்தலம் அமைந்துள்ளது.


முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது. விசேஷ நாட்களில் சுவாமி உலா வருவது சிறப்பம்சம். விஜயதசமியன்று குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருதல், பரதநாட்டியம் முதலானவைகளை கற்றுக் கொடுத்தல் மிகவும் சிறப்பு


தலவரலாறு:

லிவர்பூல் வாழ் தமிழ் பக்தர்களின் அர்ப்பணிப்புடன் லிவர்பூல் முருகன்  கோவில் சில ஆண்டுகளுக்கு முன் திரு, மனோ மற்றும் நாதன் ஐயர் ஆகியோரால் கட்டப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. 


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், லிவர்பூல் முருகன் என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்றக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சந்நிதியின் முன் மயில் இருப்பது சிறப்பு.


மேலும், விநாயகர், சிவப்பெருமான், சக்தி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், பைரவர், சனிஸ்வரர், மற்றும் நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் அருள்கின்றனர். உற்சவமூர்த்திகள் உலா வருவது கண் கொள்ளா காட்சி.




திருவிழா:

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், விஜய் தசமி, பிரதி வெள்ளி, சஷ்டி, 


பிரார்த்தனை:

வாழ்வு செழிக்க, மன அமைதி, உலக அமைதி உண்டாக, உடல் நலன் பெற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 11-.1 மாலை 5-9 [சனி, ஞாயிறு காலை 9 – இரவு 9 வரை]


இங்கிலாந்து லிவர்பூல் முருகனை உள்ளம் உருகி வழிப்பட்டால் மன அமைதியும், உலக அமைதியும் உண்டாகும்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏




படம் 1 - வாழ்வு செழிக்க அருளும் இங்கிலாந்து லிவர்பூல் முருகன்



படம் 2 - உலக அமைதி உண்டாக அருள்கின்ற இங்கிலாந்து லிவர்பூல் முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்