கோவில் 337 - இங்கிலாந்து லண்டன் ஹைகேட்ஹில் முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-337
ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் இங்கிலாந்து லண்டன் ஹைகேட்ஹில் முருகன் கோவில்
11.5.22 புதன்
அருள்மிகு ஹைகேட்ஹில் முருகன் திருக்கோவில்
200A ஆர்ச் ரோடு (200A Arch Road)
லண்டன் N6 5BA (London N6 5BA)
இங்கிலாந்து [England]
யுனைட்டெட் கிங்டம் [United Kingdom]
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
இங்கிலாந்து தலைநகரம் லண்டன் மாநகரில் ஹைகேட் பகுதியில் ஹைகேட்ஹில் முருகன் கோவில் என்ற அழகிய முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் இந்துக்கள், குறிப்பாக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐந்து தலை நாகத்துடன் கூடிய தண்டாயுதபாணி சுவாமி சிலையினை கேரளாவை சேர்ந்த ரகீத் குமார் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த முருகன் சிலை லண்டனுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் கோவில் குருக்கள் நாக சுப்பிரமணிசாமி தலமையில் முருகன் சிலை பழனிக்கு கொண்டு வரப்பட்டு பழனி முருகன் மலைக்கோவிலை கிரிவலம் வந்த பின்னர் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது சிறப்பம்சமாகும்.
ராணி எலிசபெத்-2 மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் கோவில் பொன்விழா” கொண்டாட்டத்தின் போது ஹைகேட்ஹில் முருகன் கோவிலுக்குச் சென்றனர். இங்கிலாந்து வரலாற்றிலேயே ஆங்கிலேய ஆட்சியாளர் வருகை தந்த முதல் ஆலயம் இதுவாகும்.
தலவரலாறு:
இங்கிலாந்தில் குடியேறிய இலங்கை தமிழர் சபாபதிப்பிள்ளையின் 20 வருட கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் காரணமாக, தமிழர்கள் அனைவரும் சேர்ந்து, ஹைகேட்ஹில் முருகன் கோவில் என்றழைக்கப்படும் அழகான முருகப்பெருமான் கோவில். ஹைகேட் மலையில் டிசம்பர் 2, 1979-ல் திறக்கப்பட்டது. சைவ வேதாகமத்தின் அடிப்படையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. 13.7.1986-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
திருக்கோவில், கருவறையில் முருகன் தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். விநாயகர் நடராஜபெருமான் முதலான தெய்வங்கள் தனி சந்நிதிகளில் குடியமர்ந்து அருளுகின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், பிரதி வெள்ளி, செவ்வாய்
பிரார்த்தனை:
ஆரோக்கியம் முன்னேற்றமடைய, ஞானம், ஆற்றல் பெருக, தீவினைகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 8-.2 மாலை 5-9
ஞானம், ஆற்றல் மேம்பட லண்டன் ஹைகேட்ஹில் முருகன் மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25 🙏🙏
படம் 1 - ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் இங்கிலாந்து லண்டன் ஹைகேட்ஹில் முருகன்
படம் 2 - ஞானம், ஆற்றல் மேம்பட இங்கிலாந்து லண்டன் ஹைகேட்ஹில் முருகன் கோவிலில் 5 தலை நாக சுப்பிரமணியர்
Comments
Post a Comment