கோவில் 336 - சுவிட்சர்லாந்து பெர்ன் கல்யாண சுப்ரமணியர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-336
திருமண வரமருளும் சுவிட்சர்லாந்து பெர்ன் கல்யாண சுப்ரமணியர் கோவில்
10.5.22 செவ்வாய்
அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் திருக்கோவில்
[Kulturverein Murugan Temple Bern]
Gürbestrasse 9
3125 Toffen
லூஸ்லி ஸ்ட்ராஸ் 21 A (Loosli Strasse 21A)
3027 பெர்ன் (3027 Bern)
சுவிட்சர்லாந்து
மூலவர்: கல்யாண சுப்ரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சுவிட்சர்லாந்தின் தலைநகரம் பெர்ன் நாட்டின் மையத்தில் அழகிய ஆல்பைன் மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள லூஸ்லி ஸ்ட்ராஸ் பகுதியில் முருகப்பெருமானுக்காக கல்யாண சுப்ரமணியர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. .
ஆனி திருமஞ்சனம் வருடாந்திர திருவிழாவாக (பிரம்மோற்சவம்) மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருட திருவிழா சமயம் நாள்தோறும் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்படுகின்றது. தமிழக பாரம்பரிய முறைப்படி நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க நடைபெறும் இவ்விழாவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் ஏந்தியும் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். சிறப்பாக நடைபெறும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். முருகனுக்குரிய திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன,
தலவரலாறு:
சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கிய திருத்தலம் இதுவாகும்,
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் நின்ற கோலத்தில் கண்கொள்ளா அழகுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றார். முருகப்பெருமானின் பின்புறம் மயில் நிற்பது பொலிவு. இடப்புறம் நடராஜப்பெருமானும், வலப்புறம் விநாயகரும் வீற்றிருந்து அருளுகின்றனர். நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்வது சிறப்பு.
திருவிழா:
ஆனி திருமஞ்சனம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், மகா சிவராத்திரி, மார்கழி பூஜை, புரட்டாசி சனி, விநாயகர் சதுர்த்தி, பிரதி செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
திருமணம் நடைபெற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
மாலை 6-.8.30 (செவ்வாய், வெள்ளி, சனி மட்டும் இரவு 9 மணி வரை)
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க சுவிட்சர்லாந்து பெர்ன் கல்யாண சுப்ரமணியரை வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - திருமண வரமருளும் சுவிட்சர்லாந்து பெர்ன் கல்யாண சுப்ரமணியர்
Comments
Post a Comment