கோவில் 1612 - மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1612 மன அமைதி தந்தருளும் மலேசியா ஜோகூர் மூவார் தெண்டாயுதபாணி கோவில் 06.11.2025 வியாழன் அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவில் [அ/மி தண்டாயுதபாணி திருக்கோவில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோவில் Jalan Meriam மூவார் [Muar 84000] மூவார் மாவட்டம் [[Muar District] ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 178 கிமீ, மூவார் [Muar] 4 கிமீ, தங்காக் [Tangkak] 28 கிமீ, பஞ்சூர் [Panchor] 29 கிமீ, மலாக்கா [Malacca] 46 கிமீ ஜோகூர் பாரு [Johor Bahru] 173 கிமீ மூலவர்: தெண்டாயுதபாணி (தண்டாயுதபாணி) உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை & தெண்டாயுதபாணி கும்பாபிஷேம்: 03.11.2023 தல மகிமை: மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் மூவார் மாவட்டத்தில் உள்ள மூவார் [Muar] நகரில் Jalan Meriam பகுதியில் நாட்டுக்கோட்டை செட்டியார...