கோவில் 1707 - மலேசியா சிலாங்கூர் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1707
நல்லன அருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
9.02.2026 திங்கள்
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
சுங்கை பூலோ மருத்துவமனை [Jalan Hospital]
47000 சுங்கை பூலோ [Sungai Buloh]
பெட்டாலிங் மாவட்டம் [Petaling District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 25 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 18 கிமீ, ரவாங் [Rawang] 19 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 27 கிமீ, செரண்டா [Serendah] 29 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 31 கிமீ
மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி
உற்சவர்: சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] பெட்டாலிங் மாவட்டம் [Petaling District] சுங்கை பூலோ [Sungai Buloh] நகரில் சுங்கை பூலோ மருத்துவமனை அருகில் சங்கடம் தீர்க்கும் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது செரண்டா [Serendah] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவசுப்ரமணிய சுவாமி கையில் வேலுடன் மயில் பின் நிற்க கருணை பொங்கிட அருள்பாலிக்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருகின்றனர். பங்குனி உத்திரத் திருநாளன்று ரதம் ஆலயம் சுற்றி வருவது சிறப்பம்சமாகும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 7-ம் நாள் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றது. வைகாசி விசாகம் ஒரு நாள் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடக்கின்றது. மேலும் இத்திருக்கோவிலில் தைப்பூசம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சுங்கை பூலோ மருத்துவமனை அருகில் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கோவில் கட்டப்பட்டு, தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கருணை பொங்க அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், மகா மாரியம்மன், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வ மூர்த்தங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
நல்லன அருள, இகபர சௌபாக்கியம் வேண்டி, வேண்டியவை கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் போக்க, ஞானம் மேம்பட, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் கிட்ட, மன குழப்பங்கள் தீர, தொல்லைகள் அகல, தோஷங்கள் அகன்றிட
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 6-9
இகபர சௌபாக்கியம் அருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமியை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1707 நல்லன அருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பூலோ சிவசுப்ரமணிய சுவாமி
Comments
Post a Comment