கோவில் 1704 - மலேசியா சிலாங்கூர் செமினி சிவசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1704

மங்கல வாழ்வு தந்தருளும் மலேசியா சிலாங்கூர் செமினி சிவசுப்பிரமணியர் கோவில்

6.02.2026 வெள்ளி


அருள்மிகு சிவசுப்பிரமணியர் திருக்கோவில்

[அ/மி சுப்பிரமணியர் திருக்கோவில்]

43500 செமினி [Seminyih]

உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 35 கிமீ, புரோகா [Broga] 8 கிமீ, காஜாங் [Kajang] 9 கிமீ, பாங்கி [Bangi] 14 கிமீ, செர்டாங் [Serdang] 24 கிமீ, நீலாய் [Nilai] 24 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 26 கிமீ, சிப்பாங் [Sepang] 31 கிமீ, சைபர்ஜெயா [Cyberjaya] 31 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 42 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 44 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 48 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1977

கும்பாபிஷேகம்: 06.09.2024


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District] செமினி [Seminyih] நகரில் மங்கல வாழ்வு தந்தருளும் செமினி சிவசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. 1977-ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திருக்கோவில் 2024-ல் மீண்டும் திருப்பணி வேலைகள் முடிவடைந்து 06.09.2024 அன்று மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது புரோகா [Broga] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது காஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது பாங்கி [Bangi] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது செர்டாங் [Serdang] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது நீலாய் [Nilai] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது சிப்பாங் [Sepang] பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது சைபர்ஜெயா [Cyberjaya] பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] 44 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் செமினி சிவசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவசுப்பிரமணியர்ள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் செமினி சிவசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா 11 நாட்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. திருவிழாவில் ரத ஊர்வலம் சிறப்பு நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் கோலகலமாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 7-ம் நாள் சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்று மகா அன்னதானம் அளிக்கப்படுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் சிவசுப்பிரமணியருக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மகா சிவராத்திரி திருநாள் இரவும் நான்கு கால பூஜைகள் இக்கோவிலில் நடைபெறுவது சிறப்பு.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் செமினி சிவசுப்பிரமணியர் கோவில் இப்பகுதி வாழ் தமிழர்களால் 1977-ல் கட்டப்பட்டது. சமீபத்தில் [2024] திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 06.09.2024 அன்று மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடந்தேறியது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் செமினி சிவசுப்பிரமணியர் கோவில் ஆகம விதிகளின் படி அழகாக அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி, தெய்வான சமேதராக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், சிவபெருமான், துர்க்கை, அம்மன், நவக்கிரகங்கள் உட்பட எல்லா பரிவாரத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

மங்கல வாழ்வு பெற, ஐஸ்வர்யங்கள் பெருக, வேண்டியது நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் போக்க, வாழ்வில் ஏற்றம் உண்டாக, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, மன மகிழ்ச்சி உண்டாக, வியாபாரம் மேம்பட, துயரங்கள் களைய, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9.30 மாலை 6-9.30


ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா சிலாங்கூர் செமினி சிவசுப்பிரமணியரை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1704 மங்கல வாழ்வு தந்தருளும் மலேசியா சிலாங்கூர் செமினி சிவசுப்பிரமணியர்


படம் 2 - 1704 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் மலேசியா சிலாங்கூர் செமினி சிவசுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்