கோவில் 1702 - மலேசியா சிலாங்கூர் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1702

ஞானம் மேம்பட அருளும் மலேசியா சிலாங்கூர் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவில்

4.02.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

16-வது மைல் [Batu 16]

48000 ரவாங் [Rawang]

கோம்பாக் மாவட்டம் [Gombak District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 28 கிமீ, செரண்டா [Serendah] 12 கிமீ, குண்டாங் [Kundang] 16 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 35 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 41 கிமீ, மேரு [Meru] 41 கிமீ, பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] 43 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 44 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 12.12.2024


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கோம்பாக் மாவட்டம் [Gombak District] தலைநகரம் ரவாங் [Rawang] நகரில் 16-வது மைல் [Batu 16] பகுதியில் ஞானம் மேம்பட அருளும் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் 12.12.2024 அன்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.


இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 28 கிமீ தொலைவு அல்லது செரண்டா [Serendah] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது குண்டாங் [Kundang] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது மேரு [Meru] பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ ,தொலைவு அல்லது பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாக் மாவட்டம் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரம் 9 நாட்கள் திருவிழாவாக வருடந்தோறும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றது. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலமாக நடைபெறுகின்றது. ஏழாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். தைப்பூசம் திருவிழாவும் பால்குடம், சிறப்புப் பூஜைகள் என விமரிசையாக நடக்கின்றது, மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், அஷ்டமி நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாக் மாவட்டம் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 02.08.2017 அன்று விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் சிலைகள் நூதன விக்ரக பிரதிஷ்டை விழா இனிதே நடைபெற்றது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 12.12.2024 அன்று கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாக் மாவட்டம் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர் கோவிலில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் தமிழகக் கோவில்களை போலவே கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, முத்து மாரியம்மன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், அஷ்டமி


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட அருள, கேட்டது கிடைக்க, சர்வ தோஷங்கள் விலக, வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட, நல்லன நடைபெற, மன மகிழ்ச்சி கிட்ட, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, கஷ்டங்கள் தீர, ஆனந்தம் பொங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-9.30 மாலை 7-9.30


கேட்டதை தந்தருளும் மலேசியா சிலாங்கூர் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியரை போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1702 ஞானம் மேம்பட அருளும் மலேசியா சிலாங்கூர் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர்


படம் 2 - கேட்டதை தந்தருளும் மலேசியா சிலாங்கூர் ரவாங் 16-வது மைல் [Batu 16] சுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்