கோவில் 1708 - மலேசியா மலாக்கா லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1708
செல்வம் பெருக்கும் மலேசியா மலாக்கா லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவில்
10.02.2026 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
லாடாங் பெர்த்தாம் [Ladang Bertam]
46100 டுரியான் துங்கால் [Durian Tunggal]
அலோர் காஜா மாவட்டம் [Alor Gajah District]
மலாக்கா மாநிலம் [Malacca State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 134 கிமீ, டுரியான் துங்கால் [Durian Tunggal] 1.5 கிமீ, பத்து பிரண்டாம் [Batu Berendam] 11 கிமீ, அலோர் காஜா [Alor Gajah] 15 கிமீ, மலாக்கா [Malacca] 16 கிமீ, புக்கிட் ரம்பாய் [Bukit Rambai] 16 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் தெற்கே அமைந்துள்ள மலாக்கா மாநிலம் [Malacca State] அலோர் காஜா மாவட்டம் [Alor Gajah District] டுரியான் துங்கால் [Durian Tunggal] நகருக்கு அருகில் லாடாங் பெர்த்தாம் [Sungai Buloh] நகரில் செல்வம் பெருக்கும் லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 134 கிமீ தொலைவு அல்லது டுரியான் துங்கால் [Durian Tunggal] பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது பத்து பிரண்டாம் [Batu Berendam] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது அலோர் காஜா [Alor Gajah] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது மலாக்கா [Malacca] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது புக்கிட் ரம்பாய் [Bukit Rambai] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் மிகுந்த ஆற்றலுடன் அருள்புரிகின்றார்.
மலேசியா மலாக்கா மாநிலம் அலோர் காஜா மாவட்டம் லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி 11 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு பூஜைகளுடன் ந்டைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு, 7-ம் நாள் சுவாமி திருக்கல்யாணம், தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமான் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா மலாக்கா மாநிலம் அலோர் காஜா மாவட்டம் லாடாங் பெர்த்தாம் தோட்டத்தில் சுப்பிரமணியர் கோவில் கோவில் இங்கு வாழும் தமிழர்களால் 1936-ல் சிறிய கோவிலாக எழுப்பப்பட்டது. 1950-ல் இத்திருக்கோவில் விஸ்தரிக்கப்பட்டது.
தல அமைப்பு:
மலேசியா மலாக்கா மாநிலம் அலோர் காஜா மாவட்டம் லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலேந்தி வீற்றிருந்து மிகுந்த ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், மாரியம்மன், இடும்பன், முனியாண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை,
பிரார்த்தனை:
செல்வம் பெருக, இடர்கள் களைய, வேண்டியது கிடைக்க, வினைகள் போக்க, பிணிகள் நீங்க, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-6 மாலை 5-9
இடர்கள் களையும் மலேசியா சிலாங்கூர் லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் திருப்பாதங்கள் பணிவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1708 செல்வம் பெருக்கும் மலேசியா மலாக்கா லாடாங் பெர்த்தாம் சுப்பிரமணியர் கோவில்
Comments
Post a Comment