கோவில் 1705 - மலேசியா சிலாங்கூர் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1705
சங்கடம் தீர்க்கும் மலேசியா சிலாங்கூர் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவில்
7.02.2026 சனி
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
Batu Tiga
40150 சா ஆலாம் [Shah Alam]
பெட்டாலிங் மாவட்டம் [Petaling District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 18 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 5 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 8 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 14 கிமீ, கிள்ளான் [Klang] 15 கிமீ, செர்டாங் [Serdang] 27 கிமீ, சைபர்ஜெயா [Cyberjaya] 30 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 33 கிமீ, காஜாங் [Kajang] 36 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] பெட்டாலிங் மாவட்டம் [Petaling District] சா ஆலாம் [Shah Alam] நகரில் சங்கடம் தீர்க்கும் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. 1974-ல் ஆரம்பிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் [Selangor State] தலைநகரம் சா ஆலாம் [Shah Alam] என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது கிள்ளான் [Klang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது செர்டாங் [Serdang] பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது சைபர்ஜெயா [Cyberjaya] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது காஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா 5 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கின்றனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் சிறப்பாக நடக்கின்றது. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவில் இப்பகுதி வாழ் தமிழர்களால் கட்டப்பட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் சா ஆலாம் சுப்பிரமணியர் கோவிலுக்கு மெயின் சாலையிலிருந்து படிக்கட்டுகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் அழகிய கோபுரங்கள் மற்று சிற்பங்களுடன் பொலிவு மிகுதியுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வான சமேதராக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, சிவபெருமான், அம்மன், ஐயப்பன், நாகர், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
சங்கடம் தீர, குடும்ப வாழ்வு சிறக்க, நினைத்தது நடக்க, செல்வம் பெருக, பிணிகள் தீர, வினைகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் நிலை சீராக, தொழில் மேம்பட, நல்லன அருள, மன அமைதி கிட்ட, ஆனந்தம் பொங்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 7-9
குடும்ப வாழ்வு சிறக்க அருளும் மலேசியா சிலாங்கூர் சா ஆலாம் சுப்பிரமணியரை தாள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1705 சங்கடம் தீர்க்கும் மலேசியா சிலாங்கூர் சா ஆலாம் சுப்பிரமணியர்
Comments
Post a Comment