கோவில் 1703 - மலேசியா சிலாங்கூர் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1703

விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா சிலாங்கூர் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவில்

5.02.2026 வியாழன்


அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்

ஜாலான் லாடாங் [Jalan Ladang]

45200 சபாக் பெர்ணம்/சபாக் [Sabak Bernam]

சபாக் பெர்ணம் மாவட்டம் [Sabak Bernam District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 130 கிமீ, சபாக் பெர்ணம் [Sabak Bernam] 1 கிமீ, சுங்கை பெசார் [Sungai Besar] 13 கிமீ, கோலா சிலாங்கூர் [Kuala Selangor] 63 கிமீ, பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] 81 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 122 கிமீ


மூலவர்: திருமுருகன்

உற்சவர்: திருமுருகன்


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] சபாக் பெர்ணம் மாவட்டம் [Sabak Bernam District] தலைநகரம் சபாக் பெர்ணம் [Sabak Bernam] நகரில் விருப்பங்களை நிறைவேற்றும் கோவில் சபாக் பெர்ணம் திருமுருகன் அமைந்துள்ளது.


இத்திருக்கோவில் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து [Kuala Lumpur] 130 கிமீ தொலைவு அல்லது சபாக் பெர்ணம் [Sabak Bernam] பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது சுங்கை பெசார் [Sungai Besar] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது கோலா சிலாங்கூர் [Kuala Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 81 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 122 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் சபாக் பெர்ணம் மாவட்டம் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திரம் 11 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் திருமுருகனுக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் சபாக் பெர்ணம் மாவட்டம் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவில் திரு மாணிக்கம் மற்றும் இப்பகுதி வாழ் தமிழர்களால் 1937-ல் கட்டப்பட்டது. 1960-ல் ஜாலான் லாடாங் [Jalan Ladang] பகுதியில் கோவிலுக்கு நிலம் வாங்கி 1963-ம் திருமுருகன் கோவில் முழுமையாக எழுப்பப்பட்டது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் சபாக் பெர்ணம் மாவட்டம் சபாக் பெர்ணம் திருமுருகன் கோவில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அம்மன் உட்பட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட, வினைகள் தீர, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன தைரியம் கிட்ட, தொழில் மேம்பட, இடர்கள் களைய, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட அருளும் மலேசியா சிலாங்கூர் சபாக் பெர்ணம் திருமுருகன் திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1703 விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா சிலாங்கூர் சபாக் பெர்ணம் திருமுருகன்


படம் 2 - 1703 வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட அருளும் மலேசியா சிலாங்கூர் சபாக் பெர்ணம் திருமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்