கோவில் 1706 - மலேசியா சிலாங்கூர் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1706
தெய்வீக அதிர்வுகளை தரும் மலேசியா சிலாங்கூர் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவில்
8.02.2026 ஞாயிறு
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
48010 சுங்கை புவாயா [Sungai Buaya]
உலு சிலாங்கூர் மாவட்டம் [Hulu Selangor District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 43 கிமீ, புக்கிட் செந்தோசா [Bukit Sentosa] 11 கிமீ, ரவாங் [Rawang] 12 கிமீ, புக்கிட் பெருந்தோங் [Bukit Beruntung] 13 கிமீ, செரண்டா [Serendah] 13 கிமீ, உலு சிலாங்கூர் [Hulu Selangor] 36 கிமீ, கோலா குபு பாரு [Kuala Kubu Bharu] 36 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 50 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: தண்டாயுதபாணி
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு சிலாங்கூர் மாவட்டம் [Hulu Selangor District] சுங்கை புவாயா [Sungai Buaya] நகரில் சங்கடம் தீர்க்கும் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது புக்கிட் செந்தோசா [Bukit Sentosa] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது புக்கிட் பெருந்தோங் [Bukit Beruntung] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது செரண்டா [Serendah] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது உலு சிலாங்கூர் [Hulu Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது கோலா குபு பாரு [Kuala Kubu Bharu] பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. வைகாசி விசாகத் திருநாளன்று ரதம் ஆலயம் சுற்றி வருவது முக்கிய நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பால்குடம் ஏந்தி வருகின்றனர். மேலும் இத்திருக்கோவிலில் திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் சுங்கை புவாயா பகுதியில் 1963 வாக்கில் தமிழர்கள் குடியேறினர். 1978-ல் நிலம் வாங்கி திரு மாரிமுத்து மற்றும் பல சிறந்த பக்தர்களின் பேருதவியுடன் திருக்கோவில் கட்டப்பட்டு முதல் கும்பாபிஷேகம் 1981-ல் நடைபெற்றது. இரண்டாவது கும்பாபிஷேகம் 1993-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் சுங்கை புவாயா தண்டாயுதபாணி கோவில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வ மூர்த்தங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசிமகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
தெய்வீக அதிர்வுகள் கிடைக்க, மன அமைதி பெற்றிட, எண்ணியது ஈடேற, பழ வினைகள் நீங்க, சகல பிணிகள் தீர, கல்வி, ஞானம் சிறக்க, குழந்தைச் செல்வம் கிட்ட, நோய்கள் குணமாக, நல்லன வேண்டி, மன தைரியம் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 6-9
மன அமைதி தந்தருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை புவாயா தண்டாயுதபாணி திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment