Posts

கோவில் 1082 - திருவண்ணாமலை போளூர் மாம்பட்டு பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1082 திருப்பங்கள் தரும் திருவண்ணாமலை போளூர் மாம்பட்டு பாலமுருகன் கோவில் 25.5.2024 சனி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் மாம்பட்டு-606803 போளூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: போளூர் 5 கிமீ, திருவண்ணாமலை 43 கிமீ, வேலூர் 55 கிமீ மூலவர்: பாலமுருகன் செல்: பொருளாளர் நாகலிங்கம் 99656 45694 தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் போளூரிலிருந்து 5 கிமீ தொலைவில் திருப்பங்கள் மாம்பட்டு கிராமத்தில் உள்ள சிறிய மலைக் குன்றில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை நகரத்திலிருந்து 43 கிமீ பிரயாணம் செய்தாலும், வேலூர் மா நகரத்திலிருந்து 55 கிமீ பிரயாணம் செய்தாலும் போளூர் வட்டம் மாம்பட்டு பாலமுருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக பாலமுருகன் அருள்புரிகின்றார். இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசம் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவர். ...

கோவில் 1081 - திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1081 சகல ஞானங்களையும் அருளும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் ரோடு ஆறுமுக சுவாமி கோவில் 24.5.2024 வெள்ளி அருள்மிகு ஆறுமுக சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதை செங்கம் ரோடு திருவண்ணாமலை-606601 திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 3 கிமீ மூலவர்: ஆறுமுக சுவாமி தல மகிமை: திருவண்ணாமலை கோவில் நகரத்தின் மையத்தில் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் அருளும் திருவண்ணாமலை திருத்தலத்தில் உள்ள கிரிவலப் பாதையில் செங்கம் பாதையில் அரசு கலைக்கல்லுரிக்கும், எமலிங்கத்திற்கும் இடையில் சகல ஞானங்களையும் அருளும் திருவண்ணாமலை ஆறுமுக சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ள இத்திருக்கோவிலில் மூலவராக ஆறுமுக சுவாமி அருளாட்சி செய்கின்றார். பௌர்ணமி திருநாளில் திருவண்ணாமலை திருத்தலம் கிரிவலப் பாதையை வலம் வரும் லட்சக் கணக்காண பக்தர்க...

கோவில் 1080 - திருவண்ணாமலை வயலூர் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1080 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க அருளும் திருவண்ணாமலை வயலூர் முருகன் கோவில் 23.5.2024 வியாழன் அருள்மிகு வயலூர் முருகன் திருக்கோவில் வயலூர்-604501 திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: சேத்துபட்டு 13 கிமீ, திருவண்ணாமலை 55 கிமீ, வந்தவாசி 29 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு நகரிலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் வயலூர் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றில் வினைகள் தீர்க்கும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகர் திருவண்ணாமலை கோவில் நகரத்திலிருந்து 55 கிமீ பிரயாணம் செய்தாலும், வந்தவாசி நகரிலிருந்து 29 கிமீ பிரயாணம் செய்தாலும் வயலூர் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார். முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: இக்கோவில் மிகவும் பழமையானதாகக் கர...

கோவில் 1079 - திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1079 வினைகள் தீர்க்கும் திருவண்ணாமலை புது அப்பேடு பாலமுருகன் கோவில் 22.5.2024 புதன் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் புது அப்பேடு-632313 சேத்துபட்டு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: சேத்துபட்டு 8 கிமீ, திருவண்ணாமலை 55 கிமீ, தேவிகாபுரம் 13 கிமீ மூலவர்: பாலமுருகன் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு வட்டம் சேத்துபட்டு நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் புது அப்பேடு கிராமத்தில் உள்ள சின்னமலைக் குன்றில் வினைகள் தீர்க்கும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகர் திருவண்ணாமலை கோவில் நகரத்திலிருந்து 55 கிமீ பிரயாணம் செய்தாலும், தேவிகாபுரத்திலிருந்து 13 கிமீ பிரயாணம் செய்தாலும் புது அப்பேடு பாலமுருகன் கோவிலை அடையலாம். மூலவராக பாலமுருகன் இருக்கும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் 10.09.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: பாலமுருகன் அறக்கட்டளை...

கோவில் 1078 - திருவண்ணாமலை வந்தவாசி பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1078 வேண்டும் வரம் அளிக்கும் திருவண்ணாமலை வந்தவாசி பாலமுருகன் கோவில் 21.5.2024 செவ்வாய் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் சத்யா நகர் வந்தவாசி-604408 திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: வந்தவாசி 3 கிமீ, திருவண்ணாமலை 77 கிமீ, திண்டிவனம் 34 கிமீ மூலவர்: பாலமுருகன் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலிருந்து வந்தவாசி-திண்டிவனம் சாலையில் 3 கிமீ தொலைவில் உள்ள சத்யா நகரில் வேண்டும் வரம் அளிக்கும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகர் திருவண்ணாமலை கோவில் நகரத்திலிருந்து 77 கிமீ பிரயாணம் செய்தாலும், திண்டிவனம் நகரத்திலிருந்து 34 கிமீ பிரயாணம் செய்தாலும் வந்தவாசி பாலமுருகன் கோவிலை அடையலாம். மூலவராக பலமுருகன் இருக்கும் இக்கோவிலின் கும்பாபிஷேகம் 27.01.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. விசேஷ நாட்களில் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து பாலமுருகனுக்கு பாலா...

கோவில் 1077 - திருவண்ணாமலை மேல்பள்ளிபட்டு முருகர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1077 ஆனந்தம் அருளும் திருவண்ணாமலை மேல்பள்ளிபட்டு முருகர் கோவில் 20.5.2024 திங்கள் அருள்மிகு முருகர் திருக்கோவில் [TM020827] மேல்பள்ளிபட்டு-606703 செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: செங்கம் 8 கிமீ, திருவண்ணாமலை 45 கிமீ மூலவர்: முருகர் தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: சுமார் 100 ஆண்டுகள் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் செங்கத்திலிருந்து மேற்கே 8 கிமீ தொலைவில் உள்ள மேல்பள்ளிபட்டு கிராமத்தில் ஆனந்தம் முருகர் கோவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகர் திருவண்ணாமலை கோவில் நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் முருகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வள்ளி, தெய்வானை சமேதராக இக்கோவிலில் அருள்புரிகின்றார். இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. மேலும் தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி ஆகிய் திருநாட்களில் விசேஷ பூஜைகள் ந்டைபெறுகின்றன. தல வரலாறு: இக்...

கோவில் 1076 - திருவண்ணாமலை மண்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1076 நேர்மறை எண்ணங்களை அருளும் திருவண்ணாமலை மண்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 19.5.2024 ஞாயிறு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM020825] மண்மலை-605701 செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: செங்கம் 4 கிமீ, திருவண்ணாமலை 46 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: வழிபட வரும் பக்தர்களுக்கு நேர்மறை எண்ணங்களை அருளும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் மண்மலை கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. செங்கம் நகரிலிருந்து 4 கிமீ பிரயாணம் செய்தாலும், திருவண்ணாமலை கோவில் நகரிலிருந்து 46 கிமீ பிரயாணம் செய்தாலும் மண்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை முக்கியமான திருவிழாவாக வெகு விமரிசையுடன் நடைபெறுகிறது. தைக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உ...