கோவில் 1827 - கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1827
இகபர சுகமருளும் கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
9.06.2026 செவ்வாய்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM023193]
[அ/மி தண்டாயுதபாணி திருக்கோவில்]
சோழபாண்டியபுரம் 605751
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 22 கிமீ, ரிஷிவந்தியம் 15 கிமீ, திருக்கோவிலூர் 22 கிமீ, தியாகதுருகம் 24 கிமீ, சங்கராபுரம் 33 கிமீ, உளுந்தூர்பேட்டை 39 கிமீ, திருவண்ணாமலை 49 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி
உற்சவர்: தண்டாயுதபாணி சுவாமி
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சோழபாண்டியபுரம் கிராமத்தில் இகபர சுகமருளும் கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற சோழபாண்டியபுரம் அம்மச்சியார் கோவில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 49 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமி கையில் தண்டம் ஏந்தி ஞானக்கொழுந்தாக பக்தர்களுக்கு அருள்புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி திம்மாபுரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். மேலும் இந்து அறநிலைய துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி சிறிய குன்றின் மீது சிறிய கோவிலாக அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமி கையில் தண்டத்துடன் ஞானக்கொழுந்தாக் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, துன்பங்கள் நீங்க, நினைத்தது நிறைவேற, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி, ஞானம், கலை சிறக்க, தொழில், வியாபாரம் விருத்தியடைய, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன கிட்ட, இன்பங்கள் பெருக, செல்வம் சேர, மன அமைதி கிட்ட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
துன்பங்களை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1827 இகபர சுகமருளும் கள்ளக்குறிச்சி சோழபாண்டியபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
Comments
Post a Comment