கோவில் 1826 - கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1826
திருமண வரமருளும் கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
8.06.2026 திங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM024063]
திம்மபுரம் 606201
சின்னசேலம் வட்டம், திம்மபுரம் 60620,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 22 கிமீ, சின்னசேலம் 6 கிமீ, தியாகதுருகம் 8 கிமீ, ஆத்தூர் 37 கிமீ, சங்கராபுரம் 40 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை,
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் திம்மபுரம் கிராமத்தில் திருமண வரமருளும் கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி தேரோட்டம் இத்திருக்கோவிலின் முக்கிய நிகழ்வாகும். ஏராளாமான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு, முருகப்பெருமானின் அருள் பெற்று செல்கின்றனர். தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற முக்கியத் திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகக் கருதப்படுகிறது . மேலும் இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலைய துறை மூலம் நிர்வகித்து வரப்படுகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், சிவபெருமான் உள்ளிட்ட பிற தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, எண்ணியது, ஈடேற, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, மன மகிழ்ச்சி உண்டாக, நோய்கள் குணமாக நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் கள்ளக்குறிச்சி திம்மபுரம் சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
Comments
Post a Comment