கோவில் 1825 - கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1825
மங்கலம் பொங்க அருளும் கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன் கோவில்
7.06.2026 ஞாயிறு
அருள்மிகு திருக்குன்றம் முருகன் திருக்கோவில்
திருக்குன்றம்
சின்னசேலம் 606201
சின்னசேலம் வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 38 கிமீ, சின்னசேலம் 6 கிமீ, தியாகதுருகம் 30 கிமீ, சங்கராபுரம் 36 கிமீ, ஆத்தூர் 37 கிமீ, திருக்கோவிலூர் 66 கிமீ, திருவண்ணாமலை 86 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன்
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் சின்னசேலம் நகரம் அருகில் திருக்குன்றம் என்னும் குன்றின் மீது மங்கலம் பொங்க அருளும் சின்னசேலம் திருக்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் நடைபெறும் திருத்தேரோட்டம் சிறப்பு நிகழ்வாகும்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 86 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் சின்னசேலம் திருக்குன்றம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் அழகு பாலகனாக திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன் திருக்கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. சுவாமி திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபாட்டு நற்பலன்களை பெற்றுச் செல்கின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினசரி சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய திருக்கோவிலாகும். .
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன் திருக்கோவில் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் கருணை பொங்கும் கருணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கலம் பொங்க, பாவங்கள் தீர, நினைத்தது நிறைவேற, வினைகள் போக்க, பிணிகள் விலக, திருமணப்பேறு கிட்ட, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, மன அமைதி உண்டாக, அல்லல்கள் அகல, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பாவங்கள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் பாலமுருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1825 மங்கலம் பொங்க அருளும் கள்ளக்குறிச்சி சின்னசேலம் திருக்குன்றம் முருகன்
Comments
Post a Comment