கோவில் 1824 - கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1824
சங்கடம் தீர்க்கும் கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன் கோவில்
6.06.2026 சனி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
அரசம்பட்டு 606401
சங்கராபுரம் வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 25 கிமீ, சங்கராபுரம் 7 கிமீ, சின்னசேலம் 33 கிமீ, தியாகதுருகம் 38 கிமீ, திருக்கோவிலூர் 45 கிமீ, திருவண்ணாமலை 56 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: பாலமுருகன்
கும்பாபிஷேகம்: 2024
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் சங்கடம் தீர்க்கும் அரசம்பட்டு பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2024-ல் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக ந்டைபெற்றது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 56 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் அரசம்பட்டு பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.
கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன் திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன் திருக்கோவில் சங்கராபுரம் வட்டாரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற முருகப்பெருமான் திருக்கோவிலாகும். .
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன் திருக்கோவில் பொலிவான கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் அழகு பாலகனாக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, மன மகிழ்ச்சி பெற, வேண்டிய வரங்கள் கிட்ட, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை வரம் வேண்டி, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள. வாழ்வில் ஏற்றங்கள் பெற்றிட, ஐஸ்வர்யங்கள் பெருக, தொல்லைகள் குறைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தரும் கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1824 சங்கடம் தீர்க்கும் கள்ளக்குறிச்சி அரசம்பட்டு பாலமுருகன்
Comments
Post a Comment