கோவில் 1822 - கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1822
திருமண பாக்கியமருளும் கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
4.06.2026 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023623]
ஒகையூர் 606204
தியாகதுருகம் ஒன்றியம்
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 23 கிமீ, தியாகதுருகம் 15 கிமீ, சின்னசேலம் 33 கிமீ, சங்கராபுரம் 41 கிமீ, உளுந்தூர்பேட்டை 42 கிமீ, திருக்கோவிலூர் 50 கிமீ, திருவண்ணாமலை 70 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் ஒன்றியம் ஒகையூர் கிராமத்தில் திருமண பாக்கியமருளும் ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக கருணை பொங்க வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழா தேரோட்டம் இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இப்பகுதியில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகம விதிகளின் படி அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுட நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்மன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
திருமண பாக்கியம் வேண்டி, தொல்வினைகள் தீர, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நல்லன அருள, செல்வம் சேர, உடல் சீராக இருக்க, துயரங்கள் விலக, கல்வி சிறக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தொல்வினைகள் தீர்த்தருளும் கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1822 திருமண பாக்கியமருளும் கள்ளக்குறிச்சி ஒகையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment