கோவில் 1819 - கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1819
வினைகள் தீர்த்தருளும் கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
1.06.2026 திங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023979]
விளம்பார் 606213
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 8 கிமீ, தியாகதுருகம் 18 கிமீ, சின்னசேலம் 19 கிமீ, சங்கராபுரம் 26 கிமீ, திருக்கோவிலூர் 59 கிமீ, திருவண்ணாமலை 73 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் விளம்பார் கிராமத்தில் வினைகள் தீர்த்தருளும் விளம்பார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 73 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் விளம்பார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை தற்போது நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் அழகிய கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வினைகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, கேட்டது கிடைத்திட, பிணிகள் விலக, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மனப்பயம் நீங்க, தொல்லைகள் நீங்க, சகல ஐஸ்வர்யங்கள் பெருக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சந்தான பாக்கியம் தந்தருளும் கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமியை மனமுருக வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1819 வினைகள் தீர்த்தருளும் கள்ளக்குறிச்சி விளம்பார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment