கோவில் 1818 - கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-1818

செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்  

31.05.2026 ஞாயிறு


அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 

[விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்]

குதிரைச்சந்தல் 606213

[குதிரை சந்தல்]

கள்ளக்குறிச்சி வட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் 


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 31 கிமீ, சின்னசேலம் 16 கிமீ, தியாகதுருகம் 23 கிமீ, சங்கராபுரம் 25 கிமீ, திருக்கோவிலூர் 59 கிமீ, திருவண்ணாமலை 79 கிமீ 


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை 

கும்பாபிஷேகம்: 22.02.2026


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் குதிரைச்சந்தல் கிராமத்தில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் பரிந்தல் அருகில் சங்கடம் தீர்க்கும்   குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி  கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு 22.02.2026 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கோவிலுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிடாரி திருக்கோவிலும், வழிபாட்டிற்குரிய ஐயனாரப்பன் திருக்கோவிலும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.   


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 79 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி  கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். 


கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி  திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினசரி பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. 


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசித்திப் பெற்ற முருகப்பெருமான் ஆன்மீக திருத்தலமாகும். இத்திருகோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 22.02.2026 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.      


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி  திருக்கோவில் அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன.  மேலும் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அம்மன், நவக்கிரகங்கள் மற்றும் இதர பரிவாரத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.  

.

திருவிழா: 

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, மன மகிழ்ச்சி தர, எண்ணியது ஈடேற, நல்லன வேண்டி, மன தைரியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் உண்டாக, குடும்ப வாழ்வு சிறக்க, வினைகள் அகல, பிணிகள் தீர, அல்லல்கள் அகல. தோஷங்கள் விலக

  

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்! 


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

🙏🏻🙏🏻


படம் 1 - 1818 செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி




படம் 2 - 1818 மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்