கோவில் 1817 - கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1817
சங்கடம் தீர்க்கும் கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் கோவில்
30.05.2026 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
திருக்கோவிலூர்-ஆசனூர் ரோடு
பரிந்தல்
புத்தமங்கலம் 606305
உளுந்தூர்பேட்டை வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 32 கிமீ, உளுந்தூர்பேட்டை 18 கிமீ, திருநாவலூர் 35 கிமீ, திருக்கோவிலூர் 39 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 43 கிமீ, திருவண்ணாமலை 67 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் புத்தமங்கலம் கிராமத்தில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் பரிந்தல் அருகில் சங்கடம் தீர்க்கும் புத்தமங்கலம் முருகன் கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது திருநாவலூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் புத்தமங்கலம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து அருளாட்சி புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் திருக்கோவிலில் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக தினசரி பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் திருக்கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் திருக்கோவில் பொலிவான கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அம்மன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, வேண்டும் வரங்கள் பெற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வினைகள் தீர, பிணிகள் போக்க, திருமண வரம் வேண்டி, குழந்தைப்பேறு உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் நீங்க, நல்லன அருள, மன அமைதி கிட்ட. கஷ்டங்கள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டும் வரங்களை தந்தருளும் கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன் திருவடிகள் பற்றிக் கும்பிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1817 சங்கடம் தீர்க்கும் கள்ளக்குறிச்சி புத்தமங்கலம் முருகன்
Comments
Post a Comment