கோவில் 1816 - கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1816
திருமணத் தடை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.05.2026 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM020558]
சிறுபுலியூர் 607204
சோமாசிப்பாளையம் ஊராட்சி
உளுந்தூர்பேட்டை வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 69 கிமீ, சோமாசிப்பாளையம் 1.5 கிமீ, திருநாவலூர் 12 கிமீ, பண்ருட்டி 14 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 21 கிமீ, உளுந்தூர்பேட்டை 28 கிமீ, திருக்கோவிலூர் 39 கிமீ, திருவண்ணாமலை 76 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சோமாசிப்பாளையம் ஊராட்சியில் உள்ள சிறுபுலியூர் கிராமத்தில் திருமணத் தடை நீக்கியருளும் சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருத்தலம் திருநாவலூர் ஆகும். இக்கோவிலுக்கு மிக அருகில் சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 69 கிமீ தொலைவு அல்லது ,சோமாசிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது திருநாவலூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 76 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும். இந்து அறநிலையத் துறை தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகம அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
திருமணத் தடை நீங்க, சகல தோஷங்களும் விலக, நினத்தது நடக்க, குழந்தை பாக்கியம் வேண்டி, மங்கல வாழ்வு பொங்க, எடுத்த காரியங்களில் வெற்றிப் பெற, வினைகள் தீர, பிணிகள் போக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, அல்லல்கள் அகல, மன மகிழ்ச்சி கிட்ட
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சகல தோஷங்களும் விலக அருளும் கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1816 திருமணத் தடை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி சிறுபுலியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment