கோவில் 1815 - கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1815
நல்லன அருளும் கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
28.05.2026 வியாழன்
அருள்மிகு சிவபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM043068]
சோமாசிப்பாளையம் 607101
உளுந்தூர்பேட்டை வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 68 கிமீ, திருநாவலூர் 11 கிமீ, பண்ருட்டி 12 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 20 கிமீ, உளுந்தூர்பேட்டை 27 கிமீ, திருக்கோவிலூர் 38 கிமீ, திருவண்ணாமலை 75 கிமீ
மூலவர்: சிவபாலசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சிவபாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சோமாசிப்பாளையம் கிராமத்தில் நல்லன அருளும் சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருத்தலம் திருநாவலூர் ஆகும்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது திருநாவலூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 75 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவபாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடன் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும். இந்து அறநிலையத் துறை தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் அகல, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, மன அமைதி கிட்ட, கவலைகள் மறைய, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1815 நல்லன அருளும் கள்ளக்குறிச்சி சோமாசிப்பாளையம் சிவபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment