கோவில் 1814 - கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1814
வாழ்வில் ஏற்றம் தரும் கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.05.2026 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
சூளாங்குறிச்சி 606206
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 17 கிமீ, ரிஷிவந்தியம் 15 கிமீ, சங்கராபுரம் 21 கிமீ, சின்னசேலம் 32 கிமீ, திருக்கோவிலூர் 39 கிமீ, உளுந்தூர்பேட்டை 43 கிமீ, திருவண்ணாமலை 60 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
கும்பாபிஷேகம்: 22.04.2024
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் சூளாங்குறிச்சி கிராமத்தில் வாழ்வில் ஏற்றம் தரும் சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, 22.04.2024 அன்று மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருள்கின்றார்.
கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. 9-ம் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கலயாணம், மறுநாள் தேரோட்டம், காவடி மற்றும் அலகு குத்துதல் முதலான பக்தர்களின் நேர்த்திக்கடன் என்று இத்திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத் திருநாளன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறும். காவடி ஏந்துதல் மற்றும் பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் முருகப்பெருமானின் திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் ம22.04.2024 அன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோபுரங்கள், கொடிமரம், அறுபடை வீடு சிற்பங்கள் உட்பட இறை சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றம் பெற, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, எண்ணியது ஈடேற, நல்லன அருள, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, வினைகள் போக்க, பிணிகள் தீர, உடல்நிலை சீராக, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிடைக்க, கவலைகள் மறைய, கல்வி, ஞானம் மேம்பட, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1814 வாழ்வில் ஏற்றம் தரும் கள்ளக்குறிச்சி சூளாங்குறிச்சி சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment