கோவில் 1813 - கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1813

மங்கல வாழ்வருளும் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

26.05.2026 செவ்வாய்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023302]

அ/மி [விநாயகர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்]

தியாகதுருகம் 606206

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 17 கிமீ, ரிஷிவந்தியம் 10 கிமீ, சின்னசேலம் 27 கிமீ, உளுந்தூர்பேட்டை 28 கிமீ, திருக்கோவிலூர் 33 கிமீ, சங்கராபுரம் 35 கிமீ, திருவண்ணாமலை 57 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் பகுதியில் மங்கல வாழ்வருளும் தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பழமையான திருக்கோவில் ஆகும். தற்போது இந்து அறநிலையத் துறை இத்திருக்கோவிலின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், வேல்கள் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அம்மன் மற்றும் இதர தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மங்கல வாழ்வு கிடைக்க, தோஷங்கள் நீங்க, வேண்டுவன நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, தொழில் மேம்பட, தொல்லைகள் அகல, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன தைரியம் உண்டாக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


தோஷங்களை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1813 மங்கல வாழ்வருளும் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1813 தோஷங்களை நீக்கியருளும் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்