கோவில் 1812 - கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1812

மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன் கோவில்

25.05.2026 திங்கள்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

மஞ்சபுத்தூர் 606208

[மஞ்சப்புத்தூர்]

சங்கராபுரம் வட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 15 கிமீ, சங்கராபுரம் 8 கிமீ, சின்னசேலம் 31 கிமீ, ரிஷிவந்தியம் 36 கிமீ, திருக்கோவிலூர் 40 கிமீ, திருவண்ணாமலை 52 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்தூர் கிராமத்தில் மன மகிழ்ச்சி தந்தருளும் மஞ்சபுத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் மஞ்சபுத்தூர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆறுமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் திருவிழாக்களும் ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன் திருக்கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான முருகன் திருக்கோவிலாகும். முழுமையான திருக்கோவில் கட்டவேண்டும் என்று இப்பதி வாழ் பக்தர்கள் முருகப்பெருமான் அருள் வேண்டுகின்றனர்.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான் ஆறுமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன்யில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மற்றும் பைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி பெற, வினைகள் தீர, நினைத்தது நடைபெற, பிணிகள் போக்க, திருமணம் வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, தடைகள் விலக, ஆனந்தம் பொங்க, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வினைகள் யாவையும் தீர்த்தருளும் கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1812 மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன்



படம் 2 - 
1812 வினைகள் யாவையும் தீர்த்தருளும் கள்ளக்குறிச்சி மஞ்சபுத்தூர் முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்