கோவில் 1811 - கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1811

எண்ணியதை தரும் கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில்

24.05.2026 ஞாயிறு


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023781]

செம்பராம்பட்டு 606401

சங்கராபுரம் வட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 21 கிமீ, சங்கராபுரம் 3 கிமீ, சின்னசேலம் 36 கிமீ, திருக்கோவிலூர் 41 கிமீ, ரிஷிவந்தியம் 42 கிமீ, திருவண்ணாமலை 52 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு கிராமத்தில் பிணிகள் போக்கும் செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சின்னசேலம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருக்காட்சி தந்து அருள்புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் திருவிழாக்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்புப் பூஜைகளுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான் திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவான கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மற்றும் இதர பரிவாரத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

எண்ணியது பெற்றிட, ஆன்மீக அதிர்வுகள் கிடைக்க, திருமண வரம் வேண்டி, குழந்தை வரம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, பிணிகள் போக்க, வினைகள் அகல, நல்லன வேண்டி, மன அமைதி உண்டாக, பிரச்சினைகள் விலக. தோஷங்கள் தீர


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


ஆன்மீக அதிர்வுகளை தந்தருளும் கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1811 எண்ணியதை தரும் கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1811 ஆன்மீக அதிர்வுகளை தந்தருளும் கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்