கோவில் 1786 - கேரளா திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1786

நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கேரளா திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

29.04.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கோடனூர் 680563 [Kodannur]

[கோதனூர்]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 10 கிமீ, குருவாயூர் 30 கிமீ, கொடுங்களூர் 33 கிமீ, ஷோரனூர் 45 கிமீ, கொச்சி விமான நிலையம் 50 கிமீ, பாலக்காடு 73 கிமீ, ஏர்ணாகுளம் 74 கிமீ,


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோடனூர் கிராமத்தில் நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 73 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 74 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் விஷூ மிகவும் கோலாகலாமாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. காவடி ஆட்டம் இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் ஒரு பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிமரம். உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், அம்மன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

விஷூ, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, நவராத்திரி


பிரார்த்தனை:

நேர்மறை ஆற்றலை உருவாக்க, தீமைகள் அகல, நினைத்தது நிறைவேற, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, உடல் நலன் சீராக, சந்தான பாக்கியம் வேண்டி, பழ வினைகள் தீர, பிணிகள் விலக, ஆனந்தம் பொங்க, ஞானம் சிறக்க, தோஷங்கள் போக்க

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


தீமைகளை அகற்றும் திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமியை பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1786 நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கேரளா திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1786 தீமைகளை அகற்றும் திருச்சூர் கோடனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்