கோவில் 1784 - கேரளா திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1784
இகபர சுகமருளும் கேரளா திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.04.2026 திங்கள்
அருள்மிகு பூலானி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
குருப்பம் 680311 [Kuruppam]
மேலூர் [Meloor]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 39 கிமீ, மேலூர் 1 கிமீ, கொச்சி விமான நிலையம் 23 கிமீ, கொடுங்களூர் 33 கிமீ, ஏர்ணாகுளம் 48 கிமீ, குருவாயூர் 68 கிமீ, ஷோரனூர் 71 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருப்பம் நகரில் இகபர சுகமருளும் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 71 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் அருள்கின்றார்.
திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் எல்லா திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருப்பம் கிராமத்தில் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் கொடிமரம். உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், சிவபெருமான், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, மன அமைதி பெற, நல்லன நடைபெற, கேட்டது கிடைத்திட, வினைகள் விலக, பிணிகள் தீர, குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமடைய, வியாபாரம், தொழில் சிறக்க, கவலைகள் நீங்க, ஐஸ்வர்யங்கள் பெருக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தரும் திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமியை மனமுருக பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1784 இகபர சுகமருளும் கேரளா திருச்சூர் குருப்பம் பூலானி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment