கோவில் 1783 - கேரளா திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1783

செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

26.04.2026 ஞாயிறு


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

பாண்டிபரம்பு [Pandiparambu]

சிராக்காக்கோடு 680654 [Chirakkakkode]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 12 கிமீ, ஷோரனூர் 32 கிமீ, குருவாயூர் 38 கிமீ, கொச்சி விமான நிலையம் 54 கிமீ, பாலக்காடு 56 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சிராக்காக்கோடு நகருக்கு அருகில் உள்ள பாண்டிபரம்பு பகுதியில் செல்வம் பெருக அருளும் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு விஷு கனி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. இத்திருக்கோவில் கேரளா விவசாய கல்லூர் [Kerala Agricultural Univarsity] வளாகத்தில் உள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 54 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 56 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விஷு கனி திருவிழா [ஏப்ரல் 14] வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்கள் தினசரி சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான முருகப்பெருமான் திருக்கோவில் ஆகும்.


தல அமைப்பு:

திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் பெரிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், பகவதி, ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

விஷு கனி திருவிழா, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, பிணிகள் போக்க, நல்லன நடைபெற, வேண்டியது நிறைவேற, வினைகள் தீர, உடல் ஆரோக்கியம் உண்டாக, குழந்தை வரம் வேண்டி, துயரங்கள் விலக, வியாபாரம் விருத்தியடைய, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


பிணிகள் போக்கியருளும் திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1783 செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1783 பிணிகள் போக்கியருளும் திருச்சூர் சிராக்காக்கோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா சுவாமி உலா

Comments