கோவில் 1782 - கேரளா திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                          

தினம் ஒரு முருகன் ஆலயம்-1782

ஆன்மீக அதிர்வுகளை தந்தருளும் கேரளா திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில்  

25.04.2026 சனி


அருள்மிகு  சுப்பிரமணிய  சுவாமி திருக்கோவில்

கூடப்புழா 680307 [Koodapuzha]

சாலக்குடி [Chalakudy]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala] 


இருப்பிடம்: திருச்சூர் 31 கிமீ, சாலக்குடி 4 கிமீ, கொச்சி விமான நிலையம் 21 கிமீ, ஏர்ணாகுளம் 47 கிமீ, குருவாயூர் 59 கிமீ, ஷோரனூர் 64 கிமீ 


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி 


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி நகருக்கு அருகில் உள்ள கூடப்புழா பகுதியில் ஆன்மீக அதிர்வுகளை தந்தருளும் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு அருகில் இருக்கும் சாலக்குடி நகரில் பிரசித்திப் பெற்ற இந்து திருக்கோவில்கள் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.  


திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது சாலக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 64 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி மிகுந்த ஆற்றலுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். 


திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. நேர்த்திக்கடனை நிறைவேற்ற காவடி ஏந்தி வருவது சிறப்பு நிகழ்வு. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. 


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடிக்கு நகருக்கு அருகில் இருக்கும்   கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் பெரிய கொடிமரம், தீபஸ்தம்பம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி மிகவும் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், பகவதி, சாஸ்தா, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா: 

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை 

பிரார்த்தனை:

ஆன்மீக அதிர்வுகள் பெற்றிட, செல்வம் பெருக, நல்லன வேண்டி, பிணிகள் தீர, வினைகள் போக்க, குழந்தைப் பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, கவலைகள் மறைய, ஆனந்தம் உண்டாக, மன மகிழ்ச்சி வேண்டி, தோஷங்கள் விலக

  

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


செல்வம் பெருக அருளும் திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பற்றி பிரார்த்திப்போம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்! 


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

🙏🏻🙏🏻


படம் 1 - 1782 ஆன்மீக அதிர்வுகளை தந்தருளும் கேரளா திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1782 செல்வம் பெருக அருளும் திருச்சூர் கூடப்புழா சுப்பிரமணிய சுவாமி கோவில்




Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்