கோவில் 1781 - கேரளா திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1781
அல்லல்கள் அகற்றும் கேரளா திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில்
24.04.2026 வெள்ளி
அருள்மிகு சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
சந்தன்னக்குன்னு [Chandannakunnu]
கோடசேரி 680721 [Kodassery]
[கோதசேரி/கொடசேரி]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 36 கிமீ, கோடசேரி 2 கிமீ, சாலக்குடி 11 கிமீ, கொச்சி விமான நிலையம் 29 கிமீ, ஏர்ணாகுளம் 53 கிமீ, குருவாயூர் 64 கிமீ, ஷோரனூர் 68 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோடசேரி பகுதியில் சந்தன்னக்குன்னு என்னும் குன்றில் அல்லல்கள் அகற்றும் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது கோடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது சாலக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 64 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் கொண்டு திருக்காட்சி தந்து அருளாட்சி செய்கின்றார்.
திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பக்தர்கள் காவடி ஏந்தி வருகின்றனர். மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. தோஷங்கள் நீக்க நவக்கிரக பூஜை மற்றும் இடும்பன் பூஜை சிறப்பாக நடைபெற்று வருவது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் புராதான திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அமைப்பு கேரள பாணியில் பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் கொடிமரம், தீபஸ்தம்பம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், பகவதி, இடும்பன், நாகர்கள், நவக்க்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, நவக்கிரக பூஜை, இடும்பன் பூஜை
பிரார்த்தனை:
அல்லல்கள் அகல, இரு வினைகள் தீர, நினைத்த்து நிறைவேற, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன அமைதி கிட்ட, ஐஸ்வர்யங்கள் பெருக, தொழில் சிறக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
இரு வினைகளையும் தீர்த்தருளும் திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1781 அல்லல்கள் அகற்றும் கேரளா திருச்சூர் கோடசேரி சந்தன்னக்குன்னு சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment