கோவில் 1780 - கேரளா திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1780
திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில்
23.04.2026 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கொடக்கரா-வெள்ளிக்குளங்கரா பிரதான சாலை [Kodakara Vellikulangara Road]
கோடலி 680899 [Kodaly]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 31 கிமீ, கொச்சி விமான நிலையம் 38 கிமீ, குருவாயூர் 59 கிமீ, ஷோரனூர் 63 கிமீ, ஏர்ணாகுளம் 63 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோடலி கிராமத்தில் திருப்பங்கள் தரும் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொடக்கரா-வெள்ளிக்குளங்கரா பிரதான சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில். எளிதில் இத்திருக்கோவிலை அணுகலாம்.
திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பக்தர்கள் காவடி ஏந்தி வருவது இத்திருக்கோவில் திருவிழாவின் சிறப்பு. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்தை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலின் சிறப்பம்சம் சுப்பிரமணிய சுவாமிக்கு தினமும் ந்டைபெறும் பாலாபிஷேகம் ஆகும்.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான முருகன் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைப்பு அழகுற அமைந்துள்ளது. திருக்கோவில் வாயிலில் ஒரு வேல் மற்றும் தீபஸ்தம்பம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், இடும்பன், நாக தேவதைகள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
திருப்பங்கள் பெற, மன மகிழ்ச்சி கிடைக்க, எண்ணியது ஈடேற, நல்லன வேண்டி, குழந்தை வரம் கிட்ட, நோய்கள் குணமாக, இடர்கள் களைய, ஆனந்தம் பொங்க, நேர்மறை எண்ணங்கள் உருவாக, செல்வம் சேர, வியாபாரம் மேம்பட, கல்வி சிறக்க, வினைகள் தீர, பிணிகள் போக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தந்தருளும் திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1780 திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் கோடலி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment