கோவில் 1758 - கேரளா திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1758

செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

1.04.2026 புதன்


அருள்மிகு திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கல்யாண் நகர்

அய்யந்தோல் 680003 [Ayyanthole]

[அய்யன்தோல்]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 3 கிமீ, குருவாயூர் 27 கிமீ, ஷோரனூர் 35 கிமீ, கொச்சி விமான நிலையம் 53 கிமீ, பாலக்காடு 68 கிமீ, எர்ணாகுளம் 77 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அய்யந்தோல் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 77 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற மிகப் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.


தல அமைப்பு:

திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கட்டிட அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய கொடிமரம் உள்ளது. திருக்கோவில் முழுவதும் இறைவன் சிற்பங்கள் நிறைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், சிவபெருமான், விஷ்ணு, ஐயப்பன், அம்மன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, எண்ணியது ஈடேற, நல்லன அருள, வினைகள் விலக, பிணிகள் தீர, குழந்தைப் பேறு வேண்டி, உலக நன்மை கிட்ட, திருமண பாக்கியம் கிடைக்க, இடர்கள் களைய, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் போக்க

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியது ஈடேற அருளும் திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1758 செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1758 எண்ணியது ஈடேற அருளும் திருச்சூர் அய்யந்தோல் திருக்குமரகுடம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்