கோவில் 1757 - கேரளா திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1757

ஆனந்தம் அருளும் கேரளா திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.03.2026 செவ்வாய்


அருள்மிகு வரடியம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வரடியம் 680541 [Varadiyam]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 11 கிமீ, குருவாயூர் 20 கிமீ, ஷோரனூர் 28 கிமீ, கொச்சி விமான நிலையம் 61 கிமீ, பாலக்காடு 73 கிமீ, எர்ணாகுளம் 85 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரடியம் கிராமத்தில் ஆனந்தம் அருளும் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 73 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 85 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அமைப்பு கேரள பாணியில் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், சிவபெருமான், விஷ்ணு, ஐயப்பன், அம்மன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஆனந்தம் அருள, மங்கல வாழ்வு பெற, எண்ணியது நடக்க, திருமண வர்ம், குழந்தை வரம் வேண்டி, வினைகள் போக்க, பிணிகள் அகல, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, செல்வம் பெருக, இடர்கள் களைய, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மங்கல வாழ்வு தந்தருளும் திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி தாள் பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1757 ஆனந்தம் அருளும் கேரளா திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1757 மங்கல வாழ்வு தந்தருளும் திருச்சூர் வரடியம் சுப்பிரமணிய சுவாமி கோவில் காவடி திருவிழா

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்