கோவில் 1756 - கேரளா திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1756

மன அமைதி தந்தருளும் கேரளா திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில்

30.03.2026 திங்கள்


அருள்மிகு குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

குன்னத்ரிக்கோவில் [Kunnathrikkovil]

கொடகரா 680684 [Kodakara]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 22 கிமீ, கொடகரா 1 கிமீ, கொச்சி விமான நிலையம் 29 கிமீ, குருவாயூர் 50 கிமீ, எர்ணாகுளம் 54 கிமீ, பாலக்காடு 79 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடகரா கிராமம் அருகில் உள்ள மலைக் குன்றில் மன அமைதி தந்தருளும் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நடைபெறும் கொடகரா சஷ்டி திருவிழா இப்பகுதியில் மிகச் சிறப்பான நிகழ்வாகும்.


திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது கொடகரா பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 54 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 79 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சுக்ல பக்க்ஷ சஷ்டி திருநாளன்று கொடகரா சஷ்டி மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றது. தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. காவடி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் மாவட்டத்தின் மிகவும் பழமையான திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. திருக்கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இத்திருக்கோவிலின் கட்டிட அமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், சிவபெருமான், விஷ்ணு உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி பெற, குழந்தை பாக்கியம் வேண்டி, விருப்பங்கள் நிறைவேற, பாவங்கள் விலக, வினைகள் அகல, பிணிகள் தீர, நல்லன அருள, நோய்கள் குணமாக, சகல செல்வங்களும் கிடைக்க, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


குழந்தை பாக்கியம் அருளும் திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1756 மன அமைதி தந்தருளும் கேரளா திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில்



படம் 2 - 1756 குழந்தை பாக்கியம் அருளும் திருச்சூர் கொடகரா குன்னத்ரிக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்