கோவில் 1755 - கேரளா திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1755
திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.03.2026 ஞாயிறு
அருள்மிகு பையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பையூர் [Payyur]
[பெலக்கட்டு பையூர்/Pelakattu Payyur]
சூண்டல் 680517 [Choondal]
[துய்ருவுள்ளக்காவு]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 1 கிமீ, சூண்டல் கிமீ, குருவாயூர் 8 கிமீ, ஷோரனூர் 38 கிமீ, கொச்சி விமான நிலையம் 72 கிமீ, எர்ணாகுளம் 96 கிமீ, பாலக்காடு 84 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சூண்டல் கிராமம் அருகில் உள்ள பையூர் பகுதியில் பாவங்கள் போக்கும் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது சூண்டல் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பால் காவடி (காலை), பஸ்ம காவடி (மாலை) மிகவும் சிறப்பாக நடைபெறு நிகழ்வுகளாகும். திருக்கார்த்திகை தீபத் திருநாளில் சிறப்புப் பூஜை வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை கொச்சி தேவசம் போர்டு நிர்வகித்து வருகின்றது.
தல அமைப்பு:
திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிக அருமையான கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. திருக்கோவிலில் தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், துர்க்கை, கிருஷ்ணர், நாகர்கள், இடும்பன் உள்ளிடட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
திருப்பங்கள் தர, வினைகள் தீர, வேண்டுவது கிடைக்க, பிணிகள் போக்க, குழந்தை வரம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன அமைதி கிட்ட, நல்லன அருள, தொல்லைகள் அகல, செல்வம் பெருக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-9.30 மாலை 5.30-7
வினைகள் தீர்க்கும் திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1755 திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் பையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment