கோவில் 1754 - கேரளா திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1754
பாவங்கள் போக்கும் கேரளா திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில்
28.03.2026 சனி
அருள்மிகு வல்லச்சிறை சுப்பிரமணியா திருக்கோவில்
வல்லச்சிறை [Vallachira]
[வல்லச்சிறா]
திருவுள்ளக்காவு 680561 [Thiruvullakkavu]
[துய்ருவுள்ளக்காவு]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 11 கிமீ, திருவுள்ளக்காவு 2 கிமீ, குருவாயூர் 38 கிமீ, கொச்சி விமான நிலையம் 44 கிமீ, எர்ணாகுளம் 68 கிமீ, பாலக்காடு 70 கிமீ
மூலவர்: சுப்பிரமணியா
உற்சவர்: சுப்பிரமணியா
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவுள்ளக்காவு கிராமம் அருகில் உள்ள வல்லச்சிறை பகுதியில் பாவங்கள் போக்கும் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருவுள்ளக்காவு பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியா அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
வல்லச்சிறை சுப்பிரமணியா கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியா கோவில் அழகிய கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியா கையில் வேலுடன் பொலிவான திருக்கோலத்தில் காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான். நாகர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பாவங்கள் போக்க, சகல ஐஸ்வர்யங்களும் பெற, வேலை கிடைக்க, நல்லன அருள, வேண்டியது நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தைச் செல்வம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, தொழில் சிறக்க, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-9.30 மாலை 5.30-7
சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும் திருச்சூர் வல்லச்சிறை சுப்பிரமணியாவை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
Comments
Post a Comment