கோவில் 1753 - கேரளா திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻  

தினம் ஒரு முருகன் ஆலயம்-1753

நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் கேரளா திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

27.03.2026 வெள்ளி


அருள்மிகு ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

ஞெல்லூர் [Njellur]

கல்லூர் 680317 [Kallur]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 16 கிமீ, கல்லூர் 4 கிமீ, கொச்சி விமான நிலையம் 40 கிமீ, குருவாயூர் 45 கிமீ, எர்ணாகுளம் 65 கிமீ, பாலக்காடு 71 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கல்லூர் கிராமம் அருகில் உள்ள ஞெல்லூர் பகுதியில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் மாவட்டத்தின் நன்கு அறியப்பட்ட சுப்பிரமணிய கோவிலாகும். இத்திருக்கோவிலில் நடைபெறும் ஞெல்லூர் பூயம் (காவடியாட்டம்) மிகவும் பிரபலமான பிராந்திய திருவிழாவாகும்.


திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது கல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 71 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகின்றது. காவடியாட்டம் இத்திருக்கோவிலில் சிறப்பு நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் வித்யா சரஸ்வதி பூஜை நடைபெறுவது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். கல்வி, கலை, ஞானம் மேம்பட ஏராளாமான பக்தர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.


தல வரலாறு:

கேரள மாநிலம் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் மாவட்டத்தின் நன்கு அறியப்பட்ட திருக்கோவிலாகும். கேரள கட்டிட கலைக்கு இத்திருக்கோவில் மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவான கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், சரஸ்வதி, நாகர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நேர்மறை எண்ணங்களை உண்டாக, கல்வி சிறக்க, கலை, ஞானம் மேம்பட, செல்வம் பெருக, எண்ணங்கள் ஈடேற, நல்லன வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, மன தைரியம் கிடைக்க, இடர்கள் களைய, பாவங்கள் விலக, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5-10 மாலை 5-8


கல்வி, கலைகளில் சிறக்க அருளும் திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமியை தாள் பணிந்து வேண்டிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1753 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் கேரளா திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்



படம் 2 - 1753 கல்வி, கலைகளில் சிறக்க அருளும் திருச்சூர் ஞெல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்




Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்