கோவில் 1752 - கேரளா திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1752
நல்லன அருளும் கேரளா திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில்
26.03.2026 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அமலா நகர்
சேரக்குழி 680555 [Cheerakkuzhi]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 8 கிமீ, குருவாயூர் 20 கிமீ, கொச்சி விமான நிலையம் 58 கிமீ, பாலக்காடு 71 கிமீ, எர்ணாகுளம் 83 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேரக்குழி கிராமத்தில் நல்லன அருளும் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க கொச்சி விமான நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 71 கிமீ தொலைவு அல்லது எர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 83 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருவிழா காவடி, சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. யானை அணி வகுப்பு இக்கோவிலின் முக்கிய அம்சமாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் பொலிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், ஐயப்பன், பகவதி அம்மன், நாகர்கள் உட்பட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, மன அமைதி பெற, விருப்பங்கள் நிறைவேற, நோய்கள் தீர, குழந்தைப்பேறு உண்டாக, வியாபாரம் விருத்தியடைய, வினைகள் நீங்க, துயரங்கள் போக்க, ஆனந்தம் பொங்க, பிணிகள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தந்தருளும் திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1752 நல்லன அருளும் கேரளா திருச்சூர் சேரக்குழி சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா
Comments
Post a Comment