கோவில் 1751 - கேரளா திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1751

கவலைகள் தீர்க்கும் கேரளா திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

25.03.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

குழூர் 680734 [Kuzhur]

சாலக்குடி வட்டம் [Chalakudy Taluk]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 47 கிமீ, மாளா 7 கிமீ, கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் 18 கிமீ, கொச்சி விமான நிலையம் 19 கிமீ, சாலக்குடி 23 கிமீ, குருவாயூர் 64 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி

பழமை: 800 வருடங்கள்

தீர்த்தம்: 2 திருக்குளங்கள்


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி வட்டத்தில் அமைந்திருக்கும் குழூர் கிராமத்தில் வாழ்வில் கவலைகள் தீர்க்கும் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள 51 மிகவும் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் இக்கோவிலும் ஒன்று என்பதி சிறப்பம்சமாகும். மேலும் கொச்சி விமான நிலையம், சிறப்புப் பெற்ற கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் மற்றும் பழைய யூத குடியேற்றமான மாளா நகரம் போன்ற முக்கிய இடங்கள் இத்திருக்கோவிலுக்கு அருகில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது மாளா (பழைய யூத குடியேற்றப் பகுதி) பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்திப் பெற்ற கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவிலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க கொச்சி விமான நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது சாலக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 64 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி உயரமான திருவுருவில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறு அடி உயர சுப்ரமணிய சுவாமி சிலை இருப்பது தனிச்சிறப்பாகும். எட்டு நாட்கள் நீடிக்கும் குழூர் ஏகாதசி திருவிழா ஆண்டுதோறும் இக்கிராமத்தில் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில், 'செண்டமேளம் மற்றும் பஞ்சவாத்தியம்' எனப்படும் சடங்கு ரீதியான மேள நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, மேலும் 15 யானைகளின் ஊர்வலமும் நடைபெறுகிறது. இத்திருக்கோவிலில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன.


துலாம் மாதத்தில் வரும் கந்த சஷ்டியும், மகர மாதத்தில் வரும் தைப்பூயும் (தைப்பூசம்) காவடி அபிஷேகத்திற்கான முக்கியமான திருவிழாக்களாகும். மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

800 வருடங்கள் பழமையான கேரள மாநிலத்தின் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும். இக்கோவில் கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கீழ் வருகிறது. இது அதன் கட்டிடக்கலைக்காகவும், அதன் முக்கியத்துவத்திற்காகவும் அறியப்படுகிறது.


தல அமைப்பு:

திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கட்டிட அமைப்பு மற்றும் சிற்பங்களை கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி ஆறு அடி உயரத்தில் கையில் வேலுடன் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன், பகவதி அம்மன், சிவபெருமான், நாகராஜா, நாகர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கவலைகள் தீர, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, வாழ்வில் ஏற்றங்கள் பெற, வேண்டியது நிறைவேற, வியாபாரம், தொழில் மேம்பட, வினைகள் விலக, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் வேண்டி, நல்லன அருள, உடல் ஆரோக்கியம் கிட்ட, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1751 கவலைகள் தீர்க்கும் கேரளா திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1751 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் திருச்சூர் குழூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்