கோவில் 1750 - கேரளா திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1750
வாழ்வில் திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
24.03.2026 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கொழுக்குள்ளி [Kozhukkully]
திருச்சூர் 680751 [Thrissur]
திருச்சூர் மாவட்டம்
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 8 கிமீ, குருவாயூர் 36 கிமீ, பாலக்காடு 63 கிமீ, கோயம்புத்தூர் 113 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருச்சூர் மாநகரம் அருகில் உள்ள கொழுக்குள்ளி கிராமத்தில் வாழ்வில் திருப்பங்கள் தரும் திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 113 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவான திருவுருவில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. குறிப்பாக கந்த சஷ்டி முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருச்சூர் மாநகர் அருகில் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் தீபஸ்தம்பம் மற்றும் கொடிமரம் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் பொலிவான திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன், நாகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
சஷ்டி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் திருப்பங்கள் தர, கேட்டதை கொடுக்க, கல்வி, ஞானம் சிறக்க, தொழில் சிறக்க, வினைகள் தீர, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி, நல்லன அருள, நோய்கள் குணமடைய, நிம்மதி உண்டாக, நல்லன அருள, இடர்கள் களைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டதை கொடுத்தருளும் திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1750 வாழ்வில் திருப்பங்கள் தரும் கேரளா திருச்சூர் கொழுக்குள்ளி சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment