கோவில் 1727 - திருப்பூர் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1727
தொல்லைகள் தீர்க்கும் திருப்பூர் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவில்
1.03.2026 ஞாயிறு
அருள்மிகு வீரக்குமாரசாமி திருக்கோவில் [TM013130]
காட்டம்பட்டி 638673
தாராபுரம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 61 கிமீ, தாராபுரம் 11 கிமீ, பழனி 26 கிமீ, காங்கேயம் 44 கிமீ, வெள்ளக்கோவில் 44 கிமீ
மூலவர்: வீரக்குமாரசாமி
உற்சவர்: வீரக்குமாரசாமி
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் காட்டம்பட்டி கிராமத்தில் தொல்லைகள் தீர்க்கும் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது.
திருப்பூர் வீரக்குமாரசாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவு அல்லது தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது பழனி பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது , வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வீரக்குமாரசாமி கருணை பொங்க அருளாட்சி செய்கின்றார்.
திருப்பூர் மாவட்டம் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவில் தாராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலாகும். மிகவும் பழமையான இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
திருப்பூர் மாவட்டம் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி திருக்கோவில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுக்றது இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வீரக்குமாரசாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். மூலவர். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
தொல்லைகள் தீர, மன அமைதி தர, கேட்டது கிடைக்க, இரு வினைகள் நீங்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, தொழில் மேம்பட, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தரும் திருப்பூர் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி திருவடி பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1727 தொல்லைகள் தீர்க்கும் திருப்பூர் காட்டம்பட்டி வீரக்குமாரசாமி கோவில்
Comments
Post a Comment