கோவில் 1725 - கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1725
மாங்கல்ய பாக்கியம் அருளும் கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
27.02.2026 வெள்ளி
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மருதூர்
ராமநாதபுரம்
கோயம்புத்தூர் 641045
கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: கோயம்புத்தூர் காந்திபுரம் 5 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 5 கிமீ, ராமநாதபுரம் 2 கிமீ, சிங்காநல்லூர் 4 கிமீ, உக்கடம் 6 கிமீ
மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தோற்றம்: 200 ஆண்டுகள் பழமை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் தெற்கு வட்டம் கோயம்புத்தூர் மாநகரம் மையத்தில் உள்ள ராமநாதபுரம் அருகில் இருக்கும் மருதூர் பகுதியில் மாங்கல்ய பாக்கியமருளும் கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க இத்திருக்கோவில் 200 ஆண்டுகள் பழமையானது.
கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச பிரம்மோற்சவம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி 6 நாட்கள் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் நாள் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக மயில் வாகனத்தில் திரு உலா வருவர். மூன்றாம் நாள் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாண மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். தைப்பூசத் திருநாளன்ற் (4-ம் நாள்) சிறப்புப் பூஜைகள் நடைபெற்று சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை ரதோற்சவம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். 5-ம் நாள் பரிவேட்டையும், 6-ம் நாளில் சிறப்புத் தீபாரதனைகளும் நடைபெறும். கந்த சஷ்டி பெருவிழாவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விரதமிருந்து தினசர் வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் மிகவும் கோலாகலமாக ந்டைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லாத் திருவிழாக்களும் விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 200 ஆண்டுகள் பழமையான, மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெயானை சமேதராக கல்யாண கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் வீரபாகு தேவர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மங்களாம்பிகை சமேத மங்களேஸ்வரர், ஐயப்பன், சொர்ண பைரவி சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி
பிரார்த்தனை:
மாங்கல்ய பாக்கியம் வேண்டி, எண்ணியது ஈடேற, வினைகள் தீர, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, சகல செல்வங்கள் பெருக, தொல்லைகள் அகல, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணியது ஈடேற அருளும் கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1725 மாங்கல்ய பாக்கியம் அருளும் கோயம்புத்தூர் மருதூர் சிவசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment